Monday 6 February 2012

நான்வெஜ் 40+ : /உலகம்/ஆசியா/இந்தியா/தமிழ்நாடு/சென்னை UA / UAE /USSR/USA/UK



அல்பம்..

இன்னும் எத்தனை வருசத்துக்குதான் ஏட்டிக்கு போட்டியாக ஜெ செயல்படுவார் என்று தனது வருத்தத்தை தனது அந்திமகாலத்தில் கவலையுடன் தெரிவித்து இருக்கின்றார் முன்னாள் முதல்வர் கலைஞர். அவரது அந்திம காலம் என்று எனக்கு எப்படி தெரியும் ? ஏன் என்றால் கலைஞர் எனது பதிவின் வாசாகன். அவ்வபோது எனக்கு மடல் போடுவார்.எனது படங்கள் ரெண்டு கூட முரசொலியில் வந்துள்ளது.எனக்கு என்னவோ கருணாநிதி மற்றும் ஜெவுக்கு எதாவது ஒரு பர்சனல் வென்ஜன்ஸ் இரண்டு பேருக்குமே இருந்து இருக்கும்னு நினைக்கின்றேன்.(ஓ என்னோவொரு கண்டுபுடிப்பு .ஜி.டி.நாயுடு, புதுசா கண்டுபிடிச்சிட்டாரு)

கலைஞர் தனது வயது காரணமா அனுசரிச்சு போனாலும் அந்தம்மா இவரை விட்டேனா பார் என்ற அளவிலேயே டிரீட் செய்யுது. டிரீட் செய்யும்போது சுவீட்டு ஆதிகம் வங்கிக் கொடுக்காதீர்கள் என்று அமாவை பணிவன்புடன் கேட்டுகொள்கின்றேன்.. ஏன்னா கலைஞர்க்கு சுகர் ஒத்துகொள்ளாது.
கலைஞரை தீய சக்தி கருணாநிதி என்று சொன்னவர் தமிழக அரசியலில் ஜெ ஒருவர்தான்.இதுவரை நான் உலக அரசியலை மட்டுமே கவனித்து வந்ததால் இந்த விசயங்க இப்பதான் தெரியவந்தது.

====================

மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி என்பது போல பாகிஸ்தானுக்கு இரண்டு பக்கமும் அடி.... ஒரு பக்கம் தாலிபான்கள் துரோகி என்று சொல்கின்றார்கள்..அதனால்தான் லேடன் இறப்புக்கு பாக் ராணுவம் காரணம் அல்ல என்று ஸ்டேட்மேன்ட் விடுத்து இருக்கின்றார்....ஒரு பக்கம் ஒசாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு அமெரிக்கா ரிவிட் அடிக்கின்றது... எது எப்படியோ பாகிஸ்தான் வேஷம் கலைந்து போய் விட்டது...

ராமர்புள்ளை  Jan 26, 20121 10:38 PM 
அடடே ஜெட்லி அண்ணே
பாகிஸ்தானில் இத்தன பிரச்சனையா.பூட்டுக்கு தான் அந்த ஊர் பேமஸ் எட்ன்று நெனச்சிருந்தேன். ஆனால் வன்முறைக்கும் பேமாஸ் போல.உண்மையை தைரியமாக துணிச்சலுடன் வெளியிட்டமைக்கு நன்றி.

====================

மக்சர்...

மாக்கள் தொலைகாட்சியில் எனது பேட்டி வருகின்றது என்று பதிவாக போட்டதும் தொலைபேசி மற்றும் மெயில்களில் அனைவரும் எப்ப அந்த நிகழ்ச்சி என்று விசாரித்தனர். பல பேர் அன்றுடன் கேபுள் கனேக்சனையே கட் செய்துவிட்டதாக மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்துள்ளனர். பேட்டி ஒளிபரப்பான போது எனது செல்போனில் வாழ்த்துகள் வந்து குவிந்தன.இதுபோல தாங்கள் சிரித்து ரொம்ப நாள் ஆச்சு ஜெட்லி என்று   சக பதிவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். ரொம்ப நாட்களுக்கு பிறகு வாழ்த்து செய்திகனை படித்து மெல்லிய புன்னகையுடன் வெட்கப்பட்டேன்..மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.. நான் அந்தஅளவுக்கு ஒர்த் இல்லை என்று.

====================

எனது எடிஎம் கவிதை....

ஒவ்வோறுமுறை ஏடிஎம்மில்
பணம் எடுக்கும் போதும்
ஒரு தடவ கூட பணம் வெளிய வராது
அதுக்கு ஏதோ ஏடிஎம் கார்ட் வேண்டுமாம்.
என்ன செய்வது அது
என்னை விட பெரிய பிராடு போலும்

===============

நேற்று கலைஞர் தொலைக்காட்சியில் செஷாங் ரிடெம்ஷன் ஆங்கில படத்தினை ஒளிபரப்பினார்கள். வாழ்வில் பார்த்தே தீரவேண்டிய படம் அது.ஆனால் நான் பார்த்ததை தெரிந்து அதன் இயக்குனர் தும்ப பூவில் தூக்கு மாட்ட முயர்ச்சித்தாக படத்தின் கீரோ எனக்கு தனி மடல் அனுப்பியிருந்தார். வாழ்த்துக்கள் இயக்குனர்.கீப் இட் அப். தமிழில் டப் செய்து ஒளிபரப்பினார்கள்.... மார்கன் பிரியாமேனுக்கு எம் எஸ்பாஸ்கர் குரல் கொடுத்து இருக்கின்றார்... எம் எஸ் பாஸ்கரை ஒரு காமெடியனாக அவர் குரலை கேட்டு இருக்கின்றேன்..என் முன்னாள் பல தடவை மமக்ரி செய்துள்ளார். குணச்சித்திர மற்றும் காமெடி நடிகராக அவரை பார்த்து இருக்கின்றேன்.ஆனால் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்துக்கு பின்னனி குரல் மூலம் மார்கன் பிரிமேன் நடித்த ரெட் பாத்திரத்தை, வாழ வைத்த எம் எஸ் பாஸ்கருக்கு எனது நன்றியும் வாழத்தும்...வெல்டன் மிஸ்டர் எம் எஸ்பாஸ்கர் கீப் இட் அப்...மோத்திர வாயால் வாழ்த்து வாங்கியிருக்கிறீர்கள்.இனி நல்லா வருவீங்க.

===============

நன்றாக எங்கள் வீட்டு டிவி ஓடிக்கொண்டு இருந்தது.காலையில் ஒரு தடவ மதியம் ராவுகாலம் முடிந்தவுடன் ஒரு ஓட்டம் ஓடும் . இப்போது சிவப்பு நிறம் மட்டும் வருவதில்லை... எப்போதாவது போனால் போகின்றது என்று வந்துதொலைக்கின்றது.. இந்த நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனை.. அதனால் படம் பார்க்கவே பிடிக்க மாட்டேன் என்கின்றது..நிறைய படம் பார்த்து இருக்க வேண்டும்.. மிஸ்சிங்.. எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா?? பொதுவாக நான் பச்சை பச்சையாக பேசும் ஆள்.. பச்சை கலர்தான் நியாயப்படி வராமல் இருக்கனும். என்னவென்று டிவிகாரனிடன் விசாரித்தேன். அவன் கறுப்பு & வெள்ளை டிவி என்று சொன்னான். அதுக்காக அப்புடியே வுட முடியாதே.கேபுளில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம் என்று கேபுள்காரனிடம் கேட்டேன்.அவன் உங்கள் வீட்டுக்கு நான் கேபிளே குடுக்கவில்லயே.யார் நீங்கள் என்று என்னையவே என்னை பாத்து கேட்டுவிட்டான்.என்ன பிரச்சனை என்று புரியவில்லை. சரியாக கரண்ட் இல்லாத நேரத்தில் தான் இதுமாதிரி நடக்கிறது.


===============

பலாசபி போண்டி...

இந்தியாவுல காதலில் விழுவதை தடுக்க முடியாது.. இந்தியாவில் மட்டும்தான்... காதலில் விழுந்தவர்களுக்கு அம்மாவின் பரிசாக துடப்பகட்ட அடியும்... அப்பாவின் பரிசாக பெல்ட் அடியும் கிடைக்கும்..

==========

நான்வெஜ்1888+

ஒரு அழகிய இளம் பெண்ணிடம் ஒரு ஆடவன் காதில் கிசுகிசுத்தான்.அதை கேட்டு அவள் வெக்கப்பட்டாள்.அப்படி அவன் என்ன கேட்டான் தெரியுமா நாம ரெண்டு பேரும் அப்பா அம்மா வெளையாட்டு விளையாடலாமானு...

============================


ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்.


5 comments:

நாய் நக்ஸ் said...

NICE..
:))))))))))))))))

Anonymous said...

super uuuu !!!

Anonymous said...

அரூமை!!அருமை!!அருமய் !!வல்க ஜெட்லி ச்சேகர்!!:)))))

மொக்கராசா said...

சரியான காமெடி போங்க.........

Unknown said...

பிளீஸ்! வயிற்று வலிமாத்திரை அனுப்பவும்....