Tuesday, 7 February 2012

கேட்டால் கிடை(கடி)க்கும்

ஆம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.  ரொம்ப நாளாக யாரிடமும் உதை எதுவும் வாங்காமல் உடம்பெல்லாம் மதமத என்று இருகிறதா? தவறாமல் எங்கள் குரூப்பில் வந்து இணையுங்கள். எப்படியெல்லாம் உதை வாங்கலாம் என்று இங்கே செய்முறை விளக்கம் அளித்து டிரெயின் செய்து அனுப்புகின்றோம். முழு விபரங்கள் எங்கள் பேஸ்புக் குரூப்பில் காணலாம். இருந்தாலும் யாருக்காவது அவசரமாக உதை வாங்க வேண்டும் என்று தோன்றினால் அதற்காக இங்கே சில டிப்சுகள் வழங்கியிருக்கின்றோம். படித்துப் பல உதைகளை செவ்வனே வாங்க வாழ்த்துகள். உதைகள் சரியாக கிடைக்காமல் போய் ஏமாற்றத்துடன் இருக்கும் பதிவர்களுக்காக பிரிமியம் கோர்ஸ் ஒன்று நடத்துகின்றோம். அதில் நானே வந்து பலவிதமான் உதைகளை வாங்கி காண்பித்து உங்களுக்கு புது நம்பிக்கையை அளிப்பேன்.

கேட்டால் கிடைக்கும் உதைகளின் வகைகள்

1. ஏதாவது புதிய மால் புட்கோர்ட் செல்லவும். அங்கே இருக்கும் கவுண்டர் எதிலாவது போய் உணவு வாங்கவும். உணவு வாங்கிவிட்டு திரும்பும்போது 'இதுகூட இலவசமா கடிக்கும் கட்டிங் எங்கே? குடுத்தாதான் சாப்பிடுவேன். இல்லேன்னா இதையெல்லாம் வெச்சிகிட்டு காசை திருப்பி கொடு' என்று சத்தமாக கத்தி ரகளை செய்யவும். 'மேனேஜர கூப்புடுய்யா' என்று உங்களை சுற்றி கூட்டம் சேர்ந்ததும் கத்த வேண்டும். மேனேஜர் இரண்டு மூன்று தடியர்களுடன் உங்களைநோக்கி வேகமாக வருவதை பார்த்தால் உடனடியாக கையில் இருக்கும் பிளேட்டை தின்றுவிட்டு (பிளேடை திங்க முடியாது என்பதால் பிளேட்டில் இருக்கும் உணவை என்று புரிந்துகொள்ளவும்) அங்கிருந்து ஓடிவிடவும். ஓடும்போது, 'கேட்டா கிடைக்கும்.. கேக்கலைன்னா கிடைக்காது..கேக்காட்டியும் கிடைக்கும்... கேட்டா கடிக்காது' என்றெல்லாம் கண்டபடி சத்தம் போட்டுக்கொண்டே ஓடவும். வீட்டுக்கு வந்து பெரிய வீரன் வேலுத்தம்பி போல பதிவு ஒன்ற எழுதி சகலவிதமான திரட்டிகளிலும் கொத்துவிட்டு உக்காந்துகொள்ளவும். பின்னூட்டங்களில் உங்களை பாராட்டி வருவதை மட்டும் பப்ளிச் செய்யவேண்டும். திட்டி வருவதை நைசாக 'ஸ்பேம்' செய்துவிட மறக்கக்கூடாது.2. பிளாக்கர் மாநாடு எங்காவது இலவசமாக நடக்கும். இண்டிபிளாக்கர், ஆப்பிரிக்கபிளாக்கர் போன்ற அமைப்பு மாதாமாதம் ஒன்றை நடத்தி கொண்டிருக்கின்றது. பிரீ சாப்பாடு கட்டாயம் உண்டு. அங்கே உங்கள் ஜால்ரா குட்டி பதிவர்களோடு செல்லவும். இவர்கள் எல்லாருக்கும் குவார்ட்டர் கட்டிங் வாங்கி கொடுக்க மறக்கவேண்டாம். அதற்கு காசு இல்லையா? கவலை வேண்டாம். எங்கள் 'கேட்டால் கிடைக்கும் உதைகள்' அமைப்பு மூலம் இன்ட்ரஸ்ட் பிரீ லோன் ஏற்பாடு செய்து தருகின்றோம். பேரவை ஹாலுக்கு உள்ளே நுழைந்ததும் ஓடிசென்று அத்தனை அல்லக்கைகளையும் முந்திக்கொண்டு முன்னால் நடக்கவேண்டும். ஏதோ மொத்த தமிழ் சமுதாயத்தையும் நீங்கள் தான் ரெப்ரசன்ட் செய்பவர் போல கெத்தாக நடக்கவேண்டும். அதாவது, வின்னர் வடிவேலு போல. எங்கியாவது தமிழுன்னு ஒரு போர்டு கண்ணுல பட்டுச்சுன்னாலே போதும்... அங்கன போயி நின்னுக்கினு 'எவன்டா அது தமிழ பளிச்சவன்...முன்னால வாடா.. கீசிடுவேன்...'ன்னு பயங்கர சவுண்டு உடனும். எவனுமே வந்து உங்களை கவனிக்கலைன்னாலும், அல்லக்கை கூட்டத்துக்கு முன்னால கண்டபடி சவுண்டு உட்டுட்டு, அடுத்தநாள் அதைப்பத்தி பதிவு போட்டு, 'தமிழ் பதிவர்கள்ல நாந்தான் நம்பர் ஒண்ணுலே'ன்னு ஒரு மாயையை உருவாக்கணும்.இதைப்படிச்சப்புறம்தான் மத்த ஏமாளி பதிவருங்க பொறிதட்டி சண்டைக்கு வருவாங்க. அவங்க கூட சண்டை போட்டு (பதிவுலதான். நேர்லன்னா அடி பின்னிருவாய்ங்கலே) உதை வாங்கணும். ஆனா வடிவேலு மாதிரி அடி மேல அடி வாங்குனப்புரமும் கம்பேரமா நிக்கணும்.

3. எப்பவோ எங்கயோ பார்த்த ஆங்கில பிட்டு படங்களை  வெச்சி சிறுகதைகள் எழுதனும். எழுதி அதுக்கு 'தக்காளியும் ரெண்டு ரவுண்டு சாராயமும்'னு பேரு வெச்சி ரிலீஸ் பண்ணனும். பண்ணிபுட்டு உங்க ப்லாக் பூரா அட்வடைசுமெண்டு போட்டே நிரப்பனும் (பதிவு எங்கன்னு கண்டுபுடிக்கவே ரெண்டு நாள் ஆகுற அளவுக்கு அட்வடைசுமெண்டு இருக்கணும்) எவனாவது அதை கேக்கும்போது பின்னூட்டத்துக்கு பதிலே போடக்கூடாது. மீறி திரும்பத்திரும்ப அவனுங்க தொந்திரவு பண்ணுனா, அவனுங்க கிட்ட சண்டை போட்டு அடி மேல அடி வாங்ககால்ம்.

4. 'பதிவர்களால பதிவருங்களுக்காகவே நடத்துற திரட்டி'ன்னு விளம்பரம் போட்டு ஒரு சைட்டு ஆரம்பிச்சி அதுல வர்ற வருமானம் பூராவும் ஆட்டைய போடணும். அந்த வருமானத்துல பதிவருங்களுக்கு எதாவது பங்கு இருக்கானு எவனாவது இளிச்சவாயன் கேட்பான். அவனுக்கு பதிலே சொள்ளக்கொடது. எப்படியும் இந்த வேலை எல்லாருக்கும் தெரியும்போது கண்டபடி அடி வாங்கலாம்.

மேலும் பல வகையான உதைகள் அப்பப்ப வரும்.....
  
வந்து இணையுங்கள். கேட்டால் கடிக்கும் பேஸ்புக் குரூப்பு. இதை ஆரம்பித்து வைத்தவனும் நானே தான். தமிழர்களுக்கு மத்தியில் முதல் ஆரம்பம். நானே தான் நம்பர் ஒன் தமிழ் பதிவர். நானுதான் அது. நானேதான் அது. வேற யாரும் இல்ல.

12 comments:

Anonymous said...

Thalaivaa..kalakkareenga..eppadiyo cable shankar adanginaa sari..;) romba thaan scene poduthu..

பிரபல பதிவர் said...

அன்பரே ....கேபிள் சங்கர் என்பவர் யார்? நான் எழுதுவதெல்லாம் முழுக்க முழுக்க கற்பனையே. நன்றி.

Anonymous said...

arumai. avarudaiya vimarsanthaiyum konjam puttu puttu vaikkalaam. try pannunga boss.

Anonymous said...

venumnnaa sollunga naan eluthi anuparen.

பழனி.கந்தசாமி said...

ஜோரா கீது.

மொக்கராசா said...
This comment has been removed by the author.
மொக்கராசா said...

அடுத்தவர்களை கிண்டல் செய்வது என்பது கத்தி மேல் நடப்பது போன்று ....

ஜாதி, மதம், உருவம், நடை/உடை பாவனைகள்,உடல் ஊனம் குறைபாடு அல்லது அவர்கள் செய்யும் தொழில்கள் இதை வைத்தே மற்றவர்களை கிண்டல் செய்து தமிழன் சிரிக்க பழகி கொண்டுள்ளான்..

தமிழ் படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளும் இந்த ரகமே

ஆனால் நீங்கள் எதுவும் மாதிரி இல்லாமல் பிரபல பதிவர்களின் எழுத்தை/எழுத்து நடையை எடுத்து அதையும் ரசிக்க படி பட்டைய கிளப்புறேங்க..........


யாரயும் வீடாதீங்க.....

இந்த குழைந்தேன்னு ஒரு பிரபல பதிவர் இருக்காரு அவரயும் வீடாதீங்க.:):)))))))......

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

innum innum konjam ethirparkiren.. good spooff..

பிரபல பதிவர் said...

கேபிள் சார்... பாசிடிவா எடுத்ததுக்கு நன்றி. இது ச்பூப் மட்டுமே. வசை இல்லன்னு புரிஞ்சிக்கிட்டு கமெண்டு போட்டுருக்கேங்க .. அதுக்கு நன்றி.

பிரபல பதிவர் said...

மொக்கராசா .....கட்டாயம் எல்லாரையும் இங்கே கலாய்கபடும் ... நன்றி

Anonymous said...

கேபிள் அண்டர்சன் பத்தி ezhuthi kalakkiteenga மான் , என்னமோ உலக சினிமாவே கரிச்சு குடிச்ச மாறி ஓவரா சீன போடுதுது , சின்ன பட்ஜெட் படம் வந்தா அத நக்கல் பண்றதும் , பெரிய படத்துக்கு ஜால்ராவும் அடிச்சிட்டு இருக்கு .

Anonymous said...

கேபிள் மாமா மீசையில் மண் ஒட்டிணாலும் அது ஒட்டவே இல்லைன்னேன்னு நடிக்குது. அய்யோ பாவம் கேபிள் மாமா