Friday 10 February 2012

கப்புக்காத்து - 1

வாழ்வில் நிறைய மனிதர்களை சந்தித்து இருக்கின்றேன்.. ஆவர்கலில் சிலர் என்னை கயிவி கயிவி ஊத்தி இருக்கின்றார்கள்; இன்னும் சிலர் கண்டபடி ஆடித்து இருக்கின்றார்கள்... இன்னும் சிலர் ஒரு படி மேலே போயி அவர்களின் நண்பர்கள் அத்தனை பேரையும் கூட்டு சேர்துக்கொண்டு முத்திர சந்தில் வைத்து பல நாட்கள் உதைத்தும் இருக்கின்றார்கள்.... இப்படி என்னை ஆடித்த பலரை பார்த்து வியந்து இருக்கின்றேன். சிலரை போல வாழ முயற்சித்து இருக்கின்றேன் .. அடித்த அடியில் கதறி கதறி அழுதுகொண்டு இருந்த சில நெகிழ்வான சம்பவங்களில் கோர்த்துக்கொண்ட மனிதர்களை பார்த்து வியந்து போய் இருக்கின்றேன்...இந்த இடத்தில் நான் இருந்தால்  என்ன செய்து இருப்பேன் என்று அந்த சம்பவங்களுடே பயணித்து இருக்கின்றேன்... அப்படி நான் கடலூரில் இருந்து சென்னை வரை நான் சந்தித்த மனிதர்கள் மற்றும் சம்பவங்களை தொடர்ந்து எழுத இருக்கின்றேன்.. 
 
 
கண்ட கண்ட பிட்டு படம் விமர்சணம் எழுதி பார்தேன் ஹிட்டு வரவில்லை. சக பதிவர்கள் எல்லாரும் புக்கு போட்டு விட்டார்கள். இன்னும் நான் மட்டும்தான் அடிச்சபுளி மாதிரி ஒக்காந்து இருக்கின்றேன். என்னடா செய்யலாம் என்று கழிவறையில் அமர்ந்து பல மாதம் யோசித்து இருக்கின்றேன். அப்போதுதான் இந்த ஆய்டியா அவசரமாக வந்து இருக்கின்றது. இப்புடியெல்லாம் கலர் கலராக ரீல் விட்டாலாவது என் புக்கு அடுத்த வாருடம் வருகின்றதா என்று பார்ப்போம். கிலக்கு பதிப்பக மொதோலாளி வேறு குய்யூவில் காத்து இருக்கின்றார். அமேரிக்கா பதிப்பகாத்துக்கு குடுக்கலாமா அல்லது கடலுர் பக்கம் இருக்கும் ஐரோப்பா ஊரின் பதிபகதுக்கு கொடுக்கலாமா என்று யோசித்து கொண்டு இருக்கின்றேன். பார்க்கலாம்.

போன வருடமேஎழுதவேண்டும் என்று நினைத்து வேலையே இல்லாத காரணத்தால் பிட்டு பட விமரிசனமாக எழுதி குவித்ததாழ் தள்ளிக்கொண்டே போனது..எக்கச்சக்கம்மான நேரம் இருந்தது என்று மனது சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு இருந்தது இன்று சால்ஜாப்புக்கு ஆப்பு வைத்து விட்டு தொடர்ந்து எழுத இருக்கின்றேன்...வைதேகி கத்திருந்தல் படத்தில் வரும் விஜாயகந்த் மாதிரி இனிமே நைட்டு எட்டு மணிக்கெல்லாம் தினமும் ஒவ்வூன்றாக பதிவு போடுகின்றேன். எல்லாரும் கம்புகுட்டரை ஆனைத்து விட்டு துங்கினால் எஸ்கேப் ஆகிவிட்டீர்கள் என்று பொருள். மீறி பாடித்து ரத்தவந்தி எடுத்து செத்து விடாதிர்கள்.


தலைப்பு என்ன வைக்கலாம் என்று யோசித்து யோசித்து தாவு தீர்ந்து போனதுதான் மிச்சம்... பெங்களுர் நண்பர் ரவாவுக்கு போன் செய்து சேதி சொன்னேன். பிட்டுபடம் சார்ந்த தலைப்பாக இருத்தல் நலம் என்றேன். அவரும் யோசித்து சில தலைப்புகள் எழுதி அனுப்பினார்...

ஹலோ ஜெட்லி,

1. நான் திருடிய பிட்டு டிவிடிகள்  -- கவனிக்கவும் "வாங்கிய" அல்ல "திருடிய".

2. சாப்பிட்ட டீக்கு காசுகொடுக்க சொல்லி உதைவங்கிய அனுபாவங்கள்

3. கடல் வழியே... - உங்களின் கடலூர் கடலிருந்து சென்னை கடலுக்கான பயணத்தினூடே வாங்கிய உதைகள் (ஆமா... கடலுர் கடலிலிருந்து சென்னை கடலுக்கு பெரிய நீச்சல் சம்பியன் மாரி நீந்தியே வந்துடாரு இவரு)

4. திருடா திறடா

நோ... நோ... சிரிக்ககூடாது! மை பாவம் :-(!

ரவா.
====================
என்று உடனே மெயில் தட்டினார்..

இங்கே ஒரு கேள்வி எழுகின்றது அல்லவா? நான் எழுதும் தொடருக்கு இரவாவிடம் ஏன் தலைப்பு கேட்டு இருக்கின்றேன் என்று? ஆவர்தான் ஒரிஜினலாக எனக்கு எழுதி அனுப்புவர். நான் என் பேரை மாட்டும் போடு கொல்வேன்.. அதுதான் கரணம் .
 
மீன்பாடி, நெஞ்சில் உதைத்த மனிதர்கள், பிரியானி வாங்கித்தா என்று நிறைய நானும் யோசித்துக்கொண்டே இருந்தேன். ஏன்னா நான் பெரிய கப்பல் கேப்புடன் பாருங்க. என்னோட இத்தன வருச அனுபவத்துல நான் சந்திச்ச ஓராயிரம் மனிதர்கள் பத்தி எழுத..நிஜமாகாவே கடலுரில் ஏதாவது காப்பல் ரிப்பேர் என்றால் என்னைதான் குப்பிடுவார்கள். லொள்ளுசபா மனோகர் மாதிரி நான் உளறுவது கேட்டு விழுந்து விளுந்து சிரித்துக்கொண்டே காப்பலை சரி பண்ணி பிடுவார்கள்.

கடல் அரிப்புகள் என்று  என் நாண்பன் பன்னு தின்னி பண்டாரம் சொன்னான். ஆனால் ரவா மெயில் பார்த்து விட்டு வெட்டிதனமாக ஆமர்ந்து இருக்கும்போது டுமீல் என்று பட்டக்ஸில் இருந்து காற்று பிரிந்தது. அதில் கப்புக்காத்து மட்டும்  நான் எடுத்துக்கொண்டேன்.. கேச்சியாகவும் சுருக்கமாகவும் இருந்ததால் அதனையே தலைப்பாக வைத்தேன்...தலைப்புக்கு உதவிய பண்ணு தின்னி பண்டாரம், ரவா ஜெட்லி சேகர் போன்றவர்களுக்கு என்  நன்றிகள்.

கடலுரில் என்  சொந்த வீட்டில் இருந்து ஐந்து கிலோமீட்டரில் கடல் இங்கே சென்னையில் இருப்பது கிலோ மீட்டரில் கடல்....மேட்டூரில் இருப்பது  மில்லிமிட்டரில்  கடல்.. தஞ்சாவூரில் இருப்பது செண்டிமிட்டரில் கடல்..

கப்பு வாசத்தோடு வீசும் காற்றுக்கு எப்போதும் ஒரு தனித்தன்மை உண்டு...டய்லேட் விட்டு வந்தாலும் பிசு பிசுப்பு நம்  உடலில் இருந்துகொண்டே இருக்கும்..அந்த பிசு பிசுப்பு போல நான் சொல்லப்போகும் மனிதர்களும் சில நிமிடங்கள் உங்கள் மனத்திரையில் பிசுபிசுத்தபடி இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.



அது ஒரு மலை நேரம். வழக்கப்படி ஓசி சரக்கு ஆடிக்க டாச்சுமாக்கி சென்றேன்... அங்கே  தன் என் வாழ்வில் பார்த்த மாரக்கமுடியாத மனிதர் இருந்தார். அவரை பற்றி நாளை எழுத இருக்கின்றேன்..


இதுவாவது புக்கா வருகின்றதா என்று பார்போம்...


====================


ஆகரதி 

கேச்சியாக - கேச்சி என்பாது பேச்சி என்ற கழுதையின் சக உறவினர். அது கருப்பாக இருக்கும். குண்டாக இருக்கும். கொம்பு இருக்கும். இந்த புதிய உயிரினத்தின் பெயர் எருமை என்று ஆப்பிரிக்காவில் காண்டு புடித்து இருக்கின்றார்கள். அதைப்பற்றி ஆண்வேஜில் புதிதாக ஆடுத்த வாரம் எழுதுகின்றேன்.


 

4 comments:

Anonymous said...

ஹி,ஹி ரெம்பவே ரஸித்தேன்.பாராட்டுக்கல் மற்றும் திண்டுக்கள்,உப்புகல்:)))))

Anonymous said...

aduththa gabbu kaththu eppo?

Anonymous said...

Hello..neenga use pannina picture'a Jetli use panni irukku..Gabbu Kaththu 6'la..so Jetli regular'a onga blog'a padikkarathu ;)

Anonymous said...

Gabbu kathth'a oru vazhi pannunga..