Thursday, 19 January 2012

HOSTEL III-2011/ - பதிவு எழுதியே சாவடிபது எப்பாடிஇந்த பதிவு ஏபிசி ரேட்டிங் பதிவு....

அந்த பதிவர் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணிகிட்டு இருக்காங்கப்பா என்று ஒரு வாசகர் சொன்னால்...இன்டர்நேட்டுவை  திறந்து எனது பதிவை படித்தாலேய உடனடி மரணம் என்று அர்த்தம்....


ஒரு எதிரி நாட்டு ராணுவத்திடம் ஒரு ராணுவ வீரன் மாட்டிக்கொண்டால் உண்மையை வெளிக்கொண்டு வர என்ன விதமான டாச்சர் (டாச்சர் என்பது ஜப்பானிய சேமியா.... பசிக்கோம் போது இந்த சேமியாவில் சுடுதண்ணி ஊத்தி முழுங்க வேண்டும் என்று என் ஜப்பானியா வாசகர் ஜெட்லி சொல்லி இருக்கின்றார்) எல்லாம்  செய்வார்கள்..?? அப்ப டார்ச்சர் என்பது மனரீதியாவும் இருக்கலாம் உடல் ரீதியாகவும் இருக்கலாம் அல்லவா? நான் எழுதிய இந்த பதிவு படித்தால் மனரீதி உடல்ரீதி இன்னும் பல ரீதி டாச்சரை ஈவு இரக்கம் இல்லாமல் அடைவீர்கள்.........ஆனால் முந்தைய அத்தனை பதிவுகளையும் பாடித்து நட்டு கலண்டு லூஸ் ஆனவர்களுக்கு இந்தடாச்சர் எல்லாம்  சாதாரானம்தான்......


சரி இந்த வரா விமர்சனத்தை பார்ப்போம்...
==============
HOSTEL III-2011 படத்தின் கதை என்ன?....

ஆடுகள் எல்லாம் சேர்ந்து கொண்டு பில்லை திங்கும்போது அவற்றை ஒரு மனிதான் கடத்தி சென்று விற்று சரக்கடிக்கும் படம்.
ஸ்காட் என்பவனுக்கு சில தினங்களில் திருமணம் நடக்க போகின்றது பேச்சிலர் பார்ட்டி கொண்டாடுவதற்கு நண்பர்கள் நால்வரும் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லுகின்றார்கள்.. அங்கே நண்பர்கள் காணமல் போகின்றார்கள்.. எலைட் ஹண்ட்டிங் கிளப் மெப்ர்கள் (மெப்ர்கள் என்றால் மெர்க்குரி கிரக வாசிகள்) தேவைக்கு அவர்கள் காணமல் போகின்றார்கள்.. என்ன காரணம் என்பதை  வெண்திரையில் பாருங்கள்.... ஏன்னா எனக்கு புரியல...
  

==================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
என்னதான் ஓசியாக ஆட்டுக்கறி சாப்பிட்டாலும் கோழிக்கறி  சாப்பிட்டாலும்... கண் எதிரில் அதன் பில்லைக் கொண்டு வந்து நம்மிடம் கொடுக்கின்ற பொது ஒரு மாதிரி பிலிங் (பிலிங் என்பதும் ஒரு வித மூலிகை செடி தான்... ஏற்க்கெனவே இதன் அம்மா செடியான பிலிங்கே என்பதை சில பதிவுகள் முன்னாடி பார்த்து இருக்கின்றோம்) வருமே அது போல பிலிங் இந்த பதிவை படிக்கும் பொது நிச்சயம் வரும்...


இந்த முறை ஆக்சா பிளேடு, மற்றும் ரம்பம் என்று இல்லாமல் விஷ ஊசி போட்டு மெதுவாக சாகடிக்கும் முறையில் பாதிவு எழுதி இருக்கின்றேன்...ஒருவன் முகத்தை அளவெடுத்து அவன் முகத்தின் தோளை மட்டும்.... (என்னாது முகத்தில் தோளா ???? அது எப்படி சாத்தியம் என்று யாராவது கேல்வி கேட்டல் நைட்டு பூரா கண் முழிச்சி வாசகர் கடிதம் எழுதி வெளியிட்டு விடுவேன்...ஒத்தா நான் ஐஎஸ்டி... அப்புதிதான் எழுதுவேன்... அதான் ஈர்க்கெனவே சொல்லிட்டேனே...லூசு மாதிரி இந்த இடத்தில் எழுதுகின்றேன்....செம மொக்கையா இருந்தாலும் எழுதுறது என் விருப்பம்.. படிக்கிறது உங்க விதின்னு... அப்புறம் என்ன கேல்வி?? பேசாம பாதிவை படி...) . வேண்டாம்... யப்பா.. இதுவே போதும்... உவ்வே.........

லாஸ் கர்னர் பாரில் இருக்கும் டாஸ்மாக்குக்கு நன் வாரும்போது போது பிரீயாக தான் சரக்கு அடிப்பேன் என்று நான் கையை ஆட்டி சொன்ன பொது அங்கு இருந்த சர்வர் என்னை அறைந்த எபக்ட் இருக்கிறதே......யப்பா..

வில்லனிடம் தப்பித்து விட்டார்கள் என்று சொல்லும் போது அலராம் அடி (அலராம் அடி என்பது பலராம் என்ற வச்தாது எனக்கு சொல்லிகொடுத்த வார்ம அடி....அதை பிரயோகித்து பதிவு எழுதினால் எவனுமே அதை பாடிக்க முடியாது) என்று சொல்லும் காட்சியில் ஒரு பார் அட்டென்டர் போட்டு இருக்கும் உடை....என்ன காஸ்ட்டியூம்டா..? அது  போல காஸ்ட்யூமை  நான் பார்த்ததே இல்லை.... ஆப்பிரிக்கா, உக்காந்தா, எஸ்கிமோ ஆகிய பல நாட்டுகலை சுற்றிய அனுபவத்தில் சொல்லுகின்றேன்....


==============
என் பதிவை பாடிச்சாச்சு  இல்லை.. மாடில இருந்து குதிச்சி சாவுறதா இல்லைநாக்கை பிடிங்கிட்டி சாவுரதானு முடிவு பண்ணிக்கக. ..
====================

பைனல்கிக்..
இந்த பதிவு டைம்பாஸ்பதீவு.. என்னுடையா பழைய பதிவுகள் போல் கோட் வேர்டில் இதை எழுதவிலை.....அந்தப் பதிவுகளை படிக்கையில் அது எந்த மொழி என்றே தெரியாமல் நிங்கள் அடைந்த பெரிய சச்பென்ஸ் எதையும் இந்த பதிவு தரப்போவதில்லை  ஆனால் இது அதே கான்செப்ட்..


இந்த படத்தை எங்கே வாங்குவது.....விடியக்காளை குளிச்சும் குளிக்காமையும் பர்மா பஜார் போங்கல்.ஏதாவது ஒரு கடை வாசலை மறித்து படுத்து விடுங்கள்.....நெஞ்சு மேல நான் எழுதிய பதிவுகளில் பிரிண்ட் அவுட்டை வைச்சிருங்கள்....கடை ஓனர் வந்து பிரிண்ட் அவுட்டை எடுக்க குனிவான்....அப்போ பிம்பிளிக்கி பிளாப்பி ஸ்டைலில்(ரெண்டு பதிவு முன்னாடியே இந்த டெக்னிக் குறித்து நான் எழுதியதை நினவுபாடுத்திக் கொள்ளுங்கள்) அவன் காதுகுள் "நா ஜட்லி வாசகன், நா ஜட்லி வாசகன்" என்று கூவுங்கள்...காரி துப்பியபாடி பல மொக்க படங்களை குடுப்பான்..

8 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

எங்க இருந்து சார் இதையெல்லாம் பொறுக்கிறீங்க??? ஹா ஹா ... சூப்பர் காமெடி ...

ராஜ் said...

பாஸ்,
செம காமெடி..... சும்மா சொல்ல கூடாது....தூள் கிளப்பி இருக்கேங்க...

///நான் எழுதிய இந்த பதிவு படித்தால் மனரீதி உடல்ரீதி இன்னும் பல ரீதி டாச்சரை ஈவு இரக்கம் இல்லாமல் அடைவீர்கள்.......////

செம வரிகள்.....

Anonymous said...

பதிவு சூப்பர் தல....பார்த்து போகப் போக நீங்கத்தான் உண்மையான ஜெட்லீ என்று நினைத்துவிட போகிறார்கள். duplicate will become original--பிலாசிபி பாண்டி.

Philosophy Prabhakaran said...

தல... உங்க எழுத்துநடையை படிக்கும்போது நமக்கு வேண்டப்பட்டவர் மாதிரி தெரியுதே...

மொக்கராசா said...

சரியான காமெடி......ஜாக்கி சேகருக்கு நெத்தியடி.......

பிரபல பதிவர் said...

அன்பின் பிலஜாபி பிர்பாக்ரன்...நா லோக்கல்... நா லோக்கல்.. நா லோக்கல்.. வாழிய நலம்.

அன்பின் மொக்கராசா .. ஜாக்கி சேகர் என்பவர் யாரேண்ட்ரே எனாக்கு தரியாது ... நான் பிரபல பதிவர்.. இவையேல்லாம் என்னுடைய வாடகை கற்பனை மட்டுமே...

suganthiny said...

என்னதான் ஓசியாக ஆட்டுக்கறி சாப்பிட்டாலும் கோழிக்கறி சாப்பிட்டாலும்... கண் எதிரில் அதன் பில்லைக் கொண்டு வந்து நம்மிடம் கொடுக்கின்ற பொது ஒரு மாதிரி பிலிங்
செம காமடி.

Anonymous said...

போற போக்கை பார்த்தால், அவர் எழுதலேன்னாலும் நீங்க வாரப் பதிவு எழுதுவீங்க போல தெரியுது. அவரும் உங்களை உல்டா பண்ணி எழுதி தள்ளிடலாம் இல்லையா?