Thursday 12 January 2012

கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.. ஓசி சைக்கிள் ...



இந்த பதிவு, நன் பதிவுலகுக்கு வந்த புதிதில், 1942 ல் எழுதிய  பழைய பதிவுதான்... இந்து நேசன் பத்திரிகையில் வாந்த பதிவு இது. அப்போதைய அதன் அசிரீயர் மாங்கள்பாண்டே இந்த பதிவை வெகுவாக சிலாகித்து இருக்கின்றார்.. ஆங்கிலேயர்கள் கடலூரை விட்டு ஓடியதன் காரணம், இந்தப் பதிவை பிரிண்டு அவுட்டு  எடுத்து ஆவர்கள் ஆபீசில் ஒட்டியதே என்பது என் சக பதிவர்களான மவுண்டு பட்டன், தீப்பொறி திருமுகம் ஆகியவர்களுக்கு நன்றாக தெரியும்...இருந்தாலும் இதனை இப்போது வெளியிடுவதின் காரணம் இது போல் கால ஓட்டத்தில் காணமல் போன மற்ற விஷயங்களையும் இந்த தொடரில் எழுத போகிறேன்.... அதே போல் கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவைகள் என்ற தலைப்பிலும் எழுத போகின்றேன். தொடர்ந்து கால ஓட்டகத்தில் தொலைந்து போன விஷயங்களையும் கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவைகளையும் , இவைகளில் என்னை பாதித்த விஷயங்களை எழுத போகின்றேன் ......இதே வரிகளை திரும்பித் திரும்பி இங்கே செய்ததைப் போல் தொடர்ந்து இன்னும் நான்கு முறை காப்பி பேஸ்டு செய்யலாம் என்று இருந்தேன்... அதற்குள் சிஸ்டத்தில் பிட்டு படம் ஆரம்பித்து விட்டது. . . . அதனைப் பார்த்து, பருவகாலம் பத்திரிகைக்கு ஒரு பிட்டு பட விமார்சனம் எலுதித் தர இருக்கின்றேன்.... தொடந்து என் எழுத்தை வாசிக்கும் என் சக பதிவர்கள் மற்றும்வாசகர்களுக்கு என் நன்றிகள்.தோடந்து பின்னுட்டம் மற்றம் ஓட்டுகள் அளித்து என்னை உற்சாக படுத்துவீர் என்ற நம்பிக்கையுடன்....

உங்கள் பிரபல பதிவர். 

உங்களுக்கு இன்னொரு நற்செய்தி வாசகர்கலே.. இனிமேல் கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள் என்று எழுதுவதற்கு பாதில் காகாபோ என்று சுருக்கியே எழுதுவேன். இதனை வேகமாக சொல்லி பலகிநீர்கள் என்றால், எளிதில் காலையில் கக்கா வந்துவிடும்.. எங்கே சொல்லுங்கள் பார்ப்போம்..

காகாபோ... காகாபோ... காகாபோ... ககாபோ... காகாபோ ... கக்காபோ.. கக்காபோ... இதோ வந்துவிட்டது பார்த்தீர்களா... கக்காபோ...

ஊ லாபம்...

ஆரம்பிப்போமா வாசகர்களே....

இப்படித்தான் என் சிறிய வயதில்.... கிட்டா தட்ட 1930 என்று நினைக்கின்றேன்... அப்போது முதன்முதலில் எனக்கு ஆரிமுகமான விஷயம் இந்த ஓசி சைக்கிள்.. எப்படி அறிமுகமானது என்பது ஒரு சுவாரச்யமான விசயம்...

அந்த சாதனம் ஒரு திருமண விலாவில் எனக்கு அறிமுகம் ஆயிற்று. அப்போதெல்லாம் (ஏன் . இப்போதும்தான்) அதன் பேரே எனக்கு தெரியாது. வாட்டமாக சுற்றும் இரண்டு வட்டங்கள் மீது யாரோ உக்காந்து ஓட்டுகிறார்கள். . . அதில் டடக் டடக் என்று சத்தம் கேட்கின்றது.... உருண்டையாக இருக்கும் ஒரு சாதனத்தை அமுக்கினால், ட்ரிங் ட்ரிங் என்று மணியோசை கேட்கின்றது..... அது எப்படி என்று மண்டையைப் பிய்த்துக்கொண்ட நாட்கள் அவை..


அது வட்டமாக ஒரே வேகத்தில் சுற்றுவதை இமை கொட்டாமல் ரசித்த பார்த்து கொண்டே இருந்து இருக்கின்றேன்... . வடாம் காய வைத்து விட்டு காக்காய் விரட்டுவது போல் இருக்கும் அந்த காட்சி...அப்படி விரட்டிக்கொண்டு இருக்கும்போது தான் என் வீட்டு மொட்டை மாடியில் காக்காய் கக்கா போனது என்பது இதற்குள் பக்கி லீக்சில் படித்த வாசகர்களுக்கு தெரிந்திருக்கும். அடடே... ஓசி சைக்கிளை பற்றி சொல்லும்போது காக்காய் கக்கா விசயத்துக்கு வந்து விட்டேன்... நான் எப்போதுமே இப்படித்தான். எந்த விசயத்தையும் மோத்தமாக சொல்லவே மாட்டேன்.... எதையாவது குறுக்கே சிந்தித்துவிடுவேன்....


அப்படி என் பக்கத்து வீட்டு மாமா ஒருநாள் ஒட்டிக்கொண்டு இருக்கும்போது, அவரிடம் போய் அதன் பெயரை கேட்டு இருக்கின்றேன்..... அதற்கு அவர் "ஓசியில் தின்பது மகாபாவண்ட அம்பி " என்று சொல்லிவிட்டு சாமியாராக மாறி எகிப்து போய்விட்டார். அன்ன்றுதான் ஓசி சைக்கிளை ஓடவிட்டு அதன் பின்னர் வேகமாக ஓடிவர ஆரம்பித்தேன்.... அன்ரிலிருந்து இன்ட்ரு
 வரை எனக்கு உற்ற துணைவனாக இருந்து வருகின்றது இந்த ஓசி சைக்கிள்.



இப்போது வாகச நண்பர் பண்ணு தின்னி பண்டாரம் அவர்கள் எழுதிய ஒரு கடிதம் உங்கள் பார்வைக்கு...

அன்பின் பிரபல பதிவரே...

வாலிய நலம் ..

உங்கள் பிலாக் பார்த்தேன். எப்படி கோட் வேர்டில் எழுதுவது என்று அதனைப் பார்த்து புரிந்துகொண்டேன். அதற்கான வழிமுறைகளை சொல்லிகொடுத்தால் நானும் அவ்வண்ணமே பாலோ செய்து மதம் மாறி கன்வெர்ட் ஆகிவிடுவேன்.

இப்படிக்கி,
பண்ணு தின்னி பண்டாரம்


அன்பின் பண்ணு தின்னி பண்டாரம் ...

உங்கள் கடிதம் எனக்கு மகிழ்வையும் உத்வேகத்தையும் கொடுத்தது....நிறைய பேர் சொல்லி இருக்கின்றார்கள்...கோட் வேர்டில் பதிவு எழுதுவதை சொல்லி தர சொல்லி... உங்கள் கடிதத்தால் ஆதனை இப்பொது விளக்கமாக சொல்லகிறேன்.. குறித்து வைது கொள்ளுங்கள்.... கோட் வேர்டில் பதிவு எலுத முதல் காண்டிசன் .... நீங்கல் வருத்தப்படாத முதியவர் சங்கம் வைத்து இருக்க வேண்டும்... தினமும் ஐந்து பிட்டு படங்களாவது பார்க்க வேண்டும்... பார்த்துக்கொந்டிருக்கும்போதே சிஸ்டத்தில் அமர்ந்து முழங்கை மூட்டினால் கீ போர்டை தடட  வேண்டும். . . இந்த வேலையை இரண்டு முலங்கைகளாலும் செய்ய வேண்டும்... அப்படித்தான் முதல் பாதிவில் இருந்து நான் செய்து வாருகின்றேன்.... முதல் முயற்சி கடினமாகத்தான் இருக்கும்.... ஆனால் முயற்சியே திருவினை ஆகுகும் என்பதால் இதனை விடாமல் செய்து வாருங்கள்.... டடக் டடக் என்று இரண்டு மூட்டுகளாலும் கீ போர்டை தட்டிக்கொண்டே இருன்தால், கோர்வையாக ஏழுத்துகள் பார்ம் ஆகும். அவற்றை அப்படியே பப்ளிச் பொத்தானை அமுக்கி வெளியிட்டு விடுங்கள். ....

இதுதான் என் வியாபார ரகசியம். இதனை வெளியே சொல்லி வடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.....

நிறைய பேர் சொல்லி இருக்கின்றார்கள்... வெளிநாட்டில் வாழும் நம்மவர்கள் உங்கள் பதிவுகள் படிக்கும் போது சென்னையை நாங்கள் மிஸ் பண்ணிய பிலிங்கே  (பிலிங்கே என்பது ஒருவிதமான மூலிகை செடி)  எங்களுக்கு வந்தது இல்லை என்று.. நான் ஏதோ நண்பர் கொஞ்சம்  ஓவராக சொல்லுகின்றார்களோ?  என்று எனக்கு தோன்றி  இருக்கின்றது... பட் பலர் சொல்லும் போது  அதை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்... சிர் சிலர் சொல்வதை ஆனால் ஒத்துக்கொள்ள மாட்டேன்.... இங்கே பலர் என்று நான் சொல்வது என்னையே தான்.... எண்ணற்ற வாசகர் கடிதங்களை எழுதி எழுதி வெலியிட்டு இப்போதெல்லாம் மாப்பு அடிக்காமலே மண்டை குழம்ப ஆரம்பித்து இருக்கின்றேன்.....

பெண்ணை பார்ப்பது அல்ல நீ..... கையை பிடித்து இழுத்து செருப்படி வாங்குவதே நீ.....

 

No comments: