Monday, 9 January 2012

பிரபல சினிமா பதிவர் ஆவது எப்படி? - 2


என் அருமை சிஸ்யர்களே.....உங்களுக்குப் பிரபல பதிவரின் ஆசிகள். எப்புடி பிரபல சினிமா பதிவர் ஆவதுன்னு பார்த்தோம் இல்லையா? இனி, பிரபல சினிமா பதிவர் ஆகுறதுக்கு வேற சில முறைகளும் உண்டு. அதையும் கவனிப்போம்.

தாதாயிச அப்ரோச் ஒரு வழின்னா (என்னாது தாதாயிச அப்ரோச்னா என்னவா? அடப்பாவிகளா. அதான்பா.. தப்புத்தப்பா கெட்ட வார்த்தை சொல்றது....திருட்டு டிவிடி கடைக்காரனை பிரண்டு புடிச்சி அவன் கிட்ட ஓசி மேட்டர் டிவிடி வாங்கி அதை உலகப்படம்னு எழுதுறது, எப்பபார்த்தாலும் 'டாய் நானு தாதாடா'ன்னு சொல்லியே பம்புறது, அப்பால இந்த ஓசி பிரியாணி, ஓசி குவார்ட்டர், ஓசி பொறை இதுக்கெல்லாம் எவனையாவது பிரண்டு புடிக்கிறது இதேல்லாம்தான்பா), இன்னும் பல எக்ஸ்ட்ரா வழிகள் உண்டு. அதையெல்லாம் இந்த பதிவுல சொல்லித்தாரேன்.

இப்ப, தமிழ்ல எதுனா படுமொக்கையா ஒரு படம் வந்திருக்குன்னு வெச்சிக்குவோம். அந்தப் படத்தையும் மொதோ ஷோவுல போயி பார்க்கணும். அப்பால ஒடனடியா வூட்டுக்கு வந்து, 'அன்பே டயானா' ஸ்டைல்ல கீபோர்டை தட்டுதட்டுன்னு தட்டி, உலகப்பட ரேஞ்சுல விமர்சனம் எழுதனும். அதுல, அந்தப் பட டைரடக்கரு புச்சா இருந்தா, அவரைப் புடிச்சி கிளி கிளின்னு கிழிக்கணும். அதுவே பேர் வாங்குன டைரடக்கரா இருந்தா, நைசா பாராட்டனும் (அப்பதானே சினிமாவுல சான்சு கிடைக்கும்). இது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம், எங்க சான்சு கிடைச்சாலும் ஒரு மணி நேரம் மிகாம பேசிகிட்டே இருக்கணும். அந்தப் பேச்சுல, நீங்க சினிமா தாதா, உங்களை மீறி சினிமால எதுவுமே இல்லைன்னு கேக்குறவங்களை நம்ப வெக்கணும். அப்பதான் அவன் உங்க கால்ல வுலுவான். அதுக்கப்புறம், புத்தகம் மறக்காம ரிலீசு பன்னனும்யா.. அதான் முக்கியம். புத்தகத்துக்கு, கவர்ச்சிகரமா பேருவெக்கணும். உதாரணத்துக்கு இப்புடி: ' ரெண்டு ரவுண்டு ஓல்டு மாங்கும் அரைக்கிலோ தக்காளியும்'... இந்த மாதிரி பேரு வெச்சா, சரக்கடிச்சி பளகுனவன் எல்லாம் அத்தை வாங்குவானுங்க இல்லை? அதான் ரகசியம். இந்தப் புத்தகத்தைப் பத்தி, சினிமாவுல ஜீனியசா இருக்குறவன் கூட பேசத் தயங்குவானே? அப்புடி அடிச்சி விடனும்.

 அப்பால, உங்களை மாதிரியே இருக்குற மொக்கை பதிவருங்களை எல்லாம் ஒன்னு தெரட்டி, ஒரு வட்டமோ சதுரமோ முக்கொனமோ ஆரம்பிச்சி, இது பதிவர்களால் பதிவர்களுக்காகவே அரம்பிக்கப்பட்டதுன்னு சொல்லி வெலம்பரப் படுத்தனும். ஆனா, அதுல எதுனா காசு வந்தா மட்டும் அது ஒங்க பாக்கெட்டுக்குதான் மக்கா. அதை பதிவர்களுக்குப் பிரிச்சிலாம் கொடுத்துரவே கூடாது. அப்பதானே நாம பொலைக்க முடியும்?

இது  இன்னொரு அப்ரோச். மூணாவது அப்ரோச்சும் இருக்கு. 

மூணாவது அப்ரோச் என்னனா, பதிவோட பேரையே காட்டுத்தனமா வெக்கணும். அதாவது, மஞ்சத்தேள் மன்ஜாயிரம். இது மாதிரி. அதுக்குள்ளார, சொம்மா சினிமாவ பிச்சி ஓதருற மாதிரி பீலா காட்டனும். தமிழ்ல படமே இதுவரை வரல. வந்த ஒரே படம், ஆரண்ய condom  மட்டுந்தான். யாய்... காப்பியடிச்சா இன்டர்போள்ள மாட்டி உடுவேன் ... மெயிலு அனுப்புவேன்.. பட்டா கீசிடுவேன்ன்னெல்லாம் பயங்கர உதாரு உடனும். அப்பதான், இத்தை எழுதுனவன் எவனோ ஜீநியசு போலக்குதேன்னு மக்கள் மந்திரிச்ச ஆடு மாதிரி மயங்குவானுங்க. மக்களை பயமுறுத்தியே பெரிய ஆள் ஆயிறலாம். 

இந்த மூணு அப்ரோச்ல, உங்களுக்கு எந்த அப்ரோச் வொர்க் அவுட் ஆகுதோ அந்த அப்ரோச்சை விடாம முயற்சி பன்னுநீங்கன்னா பிரபல சினிமா பதிவர் ஆயிறலாம் சிஸ்யர்களே.

நாளைக்கி இன்னும் பல இன்ட்ரஸ்டிங் தகவல்களோட மீண்டும் வருவேன்  மீண்டும் சந்திக்கலாம். 6 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

கலக்கல் நண்பா

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நண்பர்களே உங்களுக்காக ..

உங்கள் FILE மற்றும் FOLDER ஐ பூட்டி வைக்க உதவும் மென்பொருள் (FOLDER LOCK 7 - WITH REGISTER KEY)

பிரபல பதிவர் said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா சார் - நன்றி சார்

கருந்தேள் கண்ணாயிரம் said...

அய்யா பிரபல பதிவரே,

என்னைப் பத்தின காமெடியை இன்னும் கொஞ்சம் இம்ப்ரவைஸ் பண்ணிருக்கலாம் :-) .. இது பத்தாது. முழுப்பதிவு ஒண்ணை எதிர்பார்க்கிறேன். அப்பப்ப என்னோட பதிவுகளைக் கலாய்ங்க.... எங்க.. உங்க முழுத் திறமையையும் காட்டுங்க பார்க்கலாம். படிக்க ஜாலியா இருந்தது

கருந்தேள் கண்ணாயிரம் said...

word verification ஒரு இம்சை. அதை எடுத்தாத்தான் என்னவாம்

பிரபல பதிவர் said...

@ கருந்தேள் சார் - ஜெட்லி சேகர் மாதிரி 'கொல்றாங்க.. கொல்றாங்க' ஸ்டைல்ல எடுத்துக்காம, ஸ்போர்ட்டிவா எடுத்துக்கொண்டதற்கு நன்றி. உங்கள் ப்லாக் உண்மையில் எனக்குப் பிடிக்கும். உங்கள் முயற்சிக்கு என் ஆதரவும் உண்டு. மேலும் பல புதிய கலாய்ப்புகள் போடுவேன். நன்றி சார்