Tuesday 6 March 2012

ஆரவன் /உலகசினிமா/இந்தியா /சஸ்பென்ஸ் திரில்லர்

பொது வாய்  இணையத்திலோ அல்லது பத்திரிக்கையில் எழுதப்படும் எந்த விமர்சனத்தையும்  படித்து விட்டு படத்துக்கு போகும் ஆள் நான் அல்ல..
இப்போதெல்லாம் திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது ஏற்கனவே படம் பார்த்த கேரக்டர்கள் இப்ப பாரேன்.. இது நடக்கும் அது நடக்கும் என்று கதை சொல்வது குறைந்து  போய் இருக்கின்றது.. அல்லது என் கண்ணில் தென்படாமல் இருக்கலாம்.. எனக்கு இது போல படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே கதை சொல்வது அறவே பிடிக்காது.. அகையினால் தன் எப்போதும் பிட்டு படங்களுக்கு போகின்றேன்...அதில்தான் வஜனமே இல்லையே...வெறும் சத்தம் மாட்டும்தனே வாரும்....

இணையத்தில் படத்தை விமர்சனம்  செய்வதற்கு பதில் முழு கதையையும் சொல்லி விடுகின்றார்கள் என்பதால்  எந்த விமர்சனத்தையும் படம் பார்க்கும் முன் படித்தது இல்லை.. படம் பார்த்து விட்டு வேண்டுமானால் ஒத்த ரசனையுடைய அல்லது நக்கல் வீட்டு எழுதும் அதிமேதாவிதனமான விமர்சனங்களை படிப்பது உண்டு.,. ஆனால் படம் பார்க்கும் முன் எதையும் படிக்கவே மாட்டேன்..அதெபோல் பாடம் பார்த்துவிட்டு வந்த பின்னரும் எதையும் பாடிக்க மட்டேன்...காரணம் எழுத்துகுட்டி படிப்பதற்குள் விடிந்து விடுகின்றது...அதாவாது சன்சைன் வந்துவிடுகின்றது....

அதே போல இப்போது இன்னோரு டிரெண்ட்.. பேஸ்புக்கில் படத்தை பற்றி இரண்டு வரியில் நல்லா இருக்கும்  நல்லா இல்லை என்று எழுதி விடுகின்றார்கள்...  அப்படி நல்லா இல்லை என்று சொல்லும் படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்து இருக்கின்றேன்...  நல்லா இல்லை என்று  சொன்ன படங்களை பார்த்து ரசித்த இருக்கிறேன்.. அதில் பலது என்னை ஏமாற்றியது இல்லை... ரசனை வேவ்வேறாய் இருக்கும்...என் ராசனை இம்புட்டுதான்....

அதே போல மெத்த படித்த இலக்கியவாதிகள் விமர்சனத்தை நான் வாசிப்பதே இல்லை.. காரணம் இலக்கியம் படித்தவர்களுக்கு தான் மட்டுமே அதிகம் தெரிந்தவன் என்பதை நிரூபிக்க படங்களை விமர்சிக்க எடுத்து, குத்தி கிழித்து விடுகின்றார்கள்.. பட் எந்த ஒரு கருத்தையும் சொல்ல  அவர்களுக்கு உரிமை இருக்கின்றது.. அது தவறு என்று சொல்லவும் கூடாது...(???!!!)

ஒரு வரி எனக்கு  நினைவுக்கு வருகின்றது .. மெத்த படித்த இருவர் பேசிக்கொள்வது பைத்தியக்காரதனமாக இருக்கும்.. இரண்டு பாமரர்கள் பேசிக்கொள்வது அறிவாளித்தனமாக இருக்கும் என்று படித்த வரிகள்  நினைவுக்கு வருகின்றன (எவ்வளவு பெரிய ஒருவரி...இதை படிச்சப்புறம் எனக்கு ஒரு வரி நினைவு வருது..ஆதாவது நமக்கு பிரியலைன்னா அது பைத்தியகாரா தனம்...என்ன கெடுமை சர் இது)

முதலில் வசந்தபாலனுக்கு  பாராட்டுகளை தெரிவித்து விடுவோம்...காரணம் வழக்கமாக அரைத்த மாவையே அரைக்காமல் 18ஆம் நூற்றாண்டு பக்கம் போனதுக்கு.... பேப்பரில் 18ஆம் நூற்றாண்டு என்று எழுதுவது மிக சுலபம்... எழுதியை படிப்பது அதை விட ரொம்ப சுலபம்.. ஆனால் 18ஆம் நூற்றாண்டை செல்லுலாய்டில் பதியவைப்பது பருப்பு எறைய வைக்கும் காரியம் என்பது பலருக்கு  புரிவதில்லை..


செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன்  படம் வரலாற்று விஷயங்களை வைத்துக்கொண்டு ஜல்லியடித்து, காதில் பூ சுற்றியது போல, இந்த படம் அந்த தவறை செய்யவில்லை என்பேன்..நிறைய மொக்கையான உலகபடங்கள் பார்த்து இருக்கின்றேன்.. அது பல விருதுகளை கூட பெற்று இருக்கின்றது.அது போல இல்லாமல் இந்த படம் நன்றாகவே இருக்கின்றது..

18 ஆம் நூற்றாண்டில் இருக்கும் நகர , கிராமத்து மற்றும் கள்ளர் சமுகத்தை தமிழ் பட்ஜெட்டுக்கு முடிந்தவரை நம் கண் முன் நிறுத்தி இருக்கின்றார்கள்.. அதுக்காகவே பாராட்டப்படவேண்டும்...

==================
படத்தின் ஒன்லைன்...
காவல்காரன் வரிப்புலி (ஆதி)  இருக்கும் ஊரில் ஒரு கொலை  நடக்கின்றது.. ஊர் பலியாக ஆதி சூழ்ச்சியால் சிக்குகின்றான்.. கொலையாளி யார் என்ற உண்மையை கண்டறிந்தானா? என்பது தான் படத்தின் டூ லைன்... (?????!!!)
===================
ஆரவன்  படத்தின் கதை என்ன??? (இது தெரியாமையே மூணு மணி நேரம் படம் பாத்தியா ராசா நீ ? )


கதை நடப்பது பதினெட்டாம் நூற்றாண்டில் வேம்பூர் திருட்டு பசங்க வாழும் ஊர்.. தலைவன் கொம்பூதி (பசுபதி)... திருட்டே வாழ்க்கை .. திருட்டில் வரும் வருமானம்தான்.. அந்த கிராமத்து மக்களின் பசியை தீர்க்கின்றது..ஆனால்  இவர்கள் வசிக்கும் வேம்பூரில் இருந்து வந்தவன் என சொல்லி துப்பு வாங்கி ஒரு சில கொள்ளைகள் நடக்க, அந்த கொள்ளை அடித்தவன் யார் என்று பார்த்தால் வரிப்புலி(ஆதி) என்பவன்..

 இவர்கள்   ஊர் பேர் சொல்லி அவன் கொள்ளை அடிப்பது தெரிகின்றது.. அவன் கொள்ளை அடித்த ராணியின் நகையை மீட்கும் இடத்தில் பசுபதி மற்றும் ஆதி நட்பாகின்றார்கள்.. யார்  என்ன என்று விசாரிக்கும் போது அவன் தான் ஒரு அனாதை என்று சொல்லுகின்றான்.. 


அனால் பசுபதிக்கு ஆதி  அனாதை இல்லை என்றும், அவன் பொய் சொல்லுகின்றான் என்று மனதை அரிக்கின்றது...படம் பார்க்கப்போனால் உங்களுக்கும் அந்த சந்தேகம் ஏற்ப்படலாம்..அவன் யார்? அவன் அனாதை என்று எது சொல்லவைத்தது.. போன்ற ஆர்வமிக்க விஷயங்களை தியேட்டரில் போய் படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
==============================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

திருட்டு செய்ய கும்பலாக  பசுபதி டீம் கிளம்பி போகும் போதே நம்மை சுவாரஸ்யப்படுத்துகின்றார்கள். நிமிர்ந்து உட்கார வைக்கின்றார்கள்..

சரியாக பத்து நிமிடத்துக்கு மேல்.......  அதிகமான டயலாக் இல்லாமல், பரபரப்பாக செய்து இருக்கும் அந்த திருட்டு சீன் கம்பபோசிஷன் அருமை..

18ஆம் நூற்றாண்டில் ஒரு கொலை... அப்பாவி ஒருவன் செய்யாத தப்புக்கு பலிக்கடாவாக மாறுகின்றான்.. அவன் அந்த கொலையை கண்டுபிடிக்க துப்பை தேடி பயணிக்கின்றான் என்று பரபரப்பான அசத்தலான கதை...

பசுபதி அசத்தி இருக்கின்றார்... அதே போல ஆதி உடல்மொழி நன்றாகவே இருக்கின்றது...உடம்பையும் அற்புதமாக வைத்து இருக்கின்றார்-.

தனிஷ்க்கா ஒரு பாட்டுக்கு உதடு  சுழித்து ஆட்டம் போட்டு விட்டு,  கண்ணீரும் கம்பலையுமாக காட்சியளித்து இருக்கின்றார்..

பரத் அஞ்சலி இருவரும்  தங்களுக்கு  திரைப்பட வாழ்க்கையில் திரும்பு முனை ஏற்படுத்திக்கொடுத்த இயக்குனர் என்பதால் சின்ன கேரக்டரில் நடித்து  தங்கள் விசுவாசத்தை  காட்டி இருக்கின்றார்கள்.
பரத்தாவது பரவாயில்லை.. அஞ்சலி இரண்டு தீப்பந்தம்  சுற்றி விட்டு இனிமே அவனை பார்க்கவே மாட்டேன்பா என்று ஒரு வரி டயலாக்கோடு பொட்டிக்கட்டி விடுகின்றார்...

பரத் கொடுத்து வைத்த ராசா.. பாளையத்து ராணி அம்சமா இருக்கறது போல என் கண்ணுக்கு படறார்... உதடு சுழித்து அத்தர் விற்க்க வரும்  பரத்தை பார்க்கும் போது எனக்கு உள்ளம் சுழித்து போனது...


திருட்டுக்கு போகும் முன்  செய்யும் முன் ஏற்பாடுகள்.. மற்றும் வாக்கு தவறாத மக்கள்.. அரசன் பேச்சை எதிர்பேச்சு பேசாத அப்படியே நம்பும் சமுகம்......ஜல்லிக்கட்டு,பெருமைக்காக யோசிக்காமல்   இறங்கும் முன் கோபம், என்று நம் கண்முன் அந்தகாலத்து மக்களை அப்படியே பிரதிபலிக்க முடிந்தவரை இயக்குனர் வசந்தபாலன் முயன்று இருக்கின்றார்..

படத்தல் சிரிக்க வைக்கும் டயலாக் பேசுபவர்... சிங்கம்புலி மட்டுமே.. பொண்டாட்டியை எப்படி வேனா பார்த்துட்டு போலாம்..ஆனா என்னோட மச்சினிச்சியை அப்படி பார்க்க என்னால அனுமதிக்க முடியாது என்று  சொல்லும் காட்சியில் விசில் சத்தம் காதை பிளக்கின்றது...

ஒளிப்பதிவு சிறப்பு... லோ பட்ஜெட்டில் என்ன  செய்ய முடியமோ? அதை சித்தார்த் செய்து இருக்கின்றார்.. நிறைய ஷாட் கம்போசிஷன்கள் ஆங்கில படத்தின் காட்சிகளை நினைவுக்கு வருவதை தவிற்க்க முடியவில்லை..

ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன்..கொடுத்தவேலையை சிறப்பாக செய்து இருக்கின்றார்...

வசனங்கள் இயல்பாய் இருப்பது படத்திற்க்கு பலம்..வசனம் சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் வெங்கடேசன் எழுதி இருக்கின்றார்..

இசை பெரிதாய் என்னை ஈர்க்கவில்லை என்று போகின்ற போக்கில் சொல்லிவிட்டு போக முடியாது.. சில இடங்களில் ரசிக்க வைக்கின்றார்..பாடகர்  கார்த்திக்.. சாரி இசைஅமைப்பாளர் கார்த்திக்.... என்னது இவர் யாரா? மவுனரகாம் படத்தில் வெத்தல  போட்ட சோக்குல என்று பாடுவரே அவர்தான்.... அவர் குட எனக்கு வசாகர் காடிதம் எழுதி இருக்கின்றார்...அதை இங்கே கொடுக்கின்றேன்...


ஆன்புள்ள ஜெட்லி...நன் கார்த்திக்... வாலிய நலம்...சவுக்கியமா? எப்புடி இருக்கேங்க???? நல்லா இருக்கீங்களா? உங்கள் பாதிவைப் படித்து தன் வழுக்கையில் உருப்பட்டேன்...அதிலும் அந்த 'கமா கொடூரன் மாமா' விமர்சனம் இருக்கின்றதே... பிட்டு பட விமர்சனம் குட இந்த அளவு இலக்கிய மாயமாய் எழுத முடியும் என்று அன்று தன பிரிந்துகொண்டேன்... மேலும் பல விமர்சனம்கள் எழுதுங்கள்...டுவிட்டரில் குப்பிடுகின்றேன்...நன்றி..
இப்படிக்கு ஜெட்லி சேகர் 


படத்தில நிறைய குறைகள் இருக்கின்றது.. செல்போன் டவர் மற்றும் மின் உயர  கோபுரம் இல்லாத இடமாக நான்கு மாதத்திற்கு மேல் லோக்கேஷன்  தேடி அலைந்து இருக்கின்றார்கள்.. இந்த பெரிய வரலாற்று பட முயற்சிக்கு முன்னால் அதை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை.


18ஆம் நுற்றாண்டு வாழ்க்கை முறையையும் இன்னும் பல விஷயங்களை இந்த படம் இன்றைய தலைமுறைக்கு சொல்லுகின்றது.. இந்த பீரியட் படத்தை எடுக்க எடுத்த முயற்சிக்கு வசந்தபாலனுக்கும் தயாரிப்பாளருக்கும் வாழ்த்தை சொல்லிக்கொள்வோம்.

பைனல்கிக்.

இந்த படம் பத்தோடு பதினொன்று என்று சொல்ல முடியாது..  படம் முழுவதும் உழைப்பு விரவிக்கிடைக்கின்றது...சிலர்  இந்த படம் மொக்கை என்று சொல்லுகின்றார்கள்.. அவர்கள் ரசனை அவ்வளவுதான்... பிட்டு படத்தை உலகப்படம் என்றெல்லாம் ஆவர்கள் எழுத தெரியதாவர்கள்...

படம் பார்க்கும் போது அப்பகலிப்டோ,பிரேவ் ஹார்ட், கிளடியேட்டர் போன்ற படங்களில் வரும் காட்சிகளையும் கோணங்களையும் நியாபகபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை....நன்றாக எழுத நிறைய  படிக்க வேண்டும்.. அது போலத்தான் திரைப்படமும்... நன் இப்படி எழுத கராணம் ஏன் என்ற்று இப்போது உங்களுக்கு பிரிந்து இருக்குமே????

நிறைய பார்த்த படங்களின் தாக்கம் இல்லாமல் எந்த  திரைப்படத்தையும் எடுக்க முடியாது என்பதே நிதர்சன உண்மை...இந்த படம் தமிழில் நல்ல முயற்சி..  இந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம்..

======================================================

அரவான் - சஸ்பென்ஸ் த்ரில்லர். இந்த தலைப்பில் இருந்தே ஜெட்டுலியின் சுயஸ்பூஃப் தொடங்கிவிடுவதால் இதற்கு மேல் இந்த பதிவை எப்படி ஸ்பூஃப் செய்வது என்றே தெரியவில்லை. மன்னித்துவிடுங்கள் என் தங்கங்களே. 

வரி வரியாக பாடியுங்கள்... உங்களுக்கே சிரிப்பு வரவில்லைஎன்றால் நன் வசாகர் காடிதங்கள் எழுதுவதை நிப்பாடி விடுகின்றேன்...

======================== 

இப்போது ஆகரதி 


அப்பகலிப்டோ - ஆப்பகடையில் வழங்கபடும் ஒரு சுவீட்டு...இதில் காரமும் ஊப்பும் அதிகமகா இருக்கும்...மூட்டையும் இருக்கும்...இரண்டுபுறமும் கருக்க வேண்டும்...


கிளடியேட்டர் - இது டிவியோடு இணைக்கபடும் கருவி...இதற்கு ச்டேபிளைசர் என்ற பெயர் கிராமத்தில் சொல்வார்கள்.. அவர்கள் கிடக்கிறார்கள் ரசானை கேட்ட பயல்கள்...

சாகித்திய விருது - சாகித்திய விருது என்றால் டிசம்பார் மாதம் தொடையில் தட்டிக்கொண்டே பாடுவார்களே....அதில் நன் ஒன்றை காவநித்து இருக்கின்றேன்...சா ரீ கா மா என்று அவர்கள் படும்போது சாம்மந்தமே இல்லமால் பின்னால் அமர்ந்துகொண்டு ஒருவர் பெரிய குச்சியில் கம்பிகட்டி அதை டொயிங் டொயிங் என்று மிட்டிக்கொண்டே இருக்கின்றார்...அந்த டொயிங் டொயிங் சாத்தம் பட்டை கேட்பாதற்கு நாராசமாக இருக்கின்றது.... இதை பற்றி டிசம்பரில் இசை ஆதாவாது மீசிக் என்பதை பற்றி ஒரு பதிவு போடுவேன்...



8 comments:

ரிட்டுலி ஸ்கட்டு said...

நச் விமார்சனம் ஜெட்லி...அருமை...ஆபரம்.. கலக்கிட்டிங்கி ...

இப்படிக்கி ஜெட்லி சேகர்

Anonymous said...

ARAVAN-2012 என்று தலைப்பு ஆங்கிலத்தில் இருந்து துவங்க வேண்டும் . ( அப்ப தான் பில் கேட்ஸ், ஒபமா , மன்மோகன் எல்லாரும் படிப்பார்கள் ). திருத்தவும்

ஸ்பீல் பர்க் said...

எனக்கு உங்கள் ஈந்த பதிவை படித்த பிறகுதான் எழ் நாட்களாக தீராமல் இறுந்த மலச்சிக்கள் எனக்கு தீர்ந்தது. நன்றி

Anonymous said...

ஜக்கி மாப்ள ரொம்ப நல்லவன்....என்ன கொஞ்சம் ஓவர் பில்ட்அப் பன்னுவான்...facebook ல நம்ம கலைஞர் கூட நின்னு ஸ்டில் இருக்கு பாருங்க சூப்பர் ஒ சூப்பர்...அத வச்சுகிட்டு என்னமா சீன் போடறான்...தலைல முடி இல்லாமலே இப்படின முடி இருந்துச்சுனா...ஐயோ நினச்சாலே பயமா இருக்கு...

Village வின்ஞானி said...

டேய் பக்கிகளா..என்னடா பிரச்சனை உங்களுக்கு...அந்த ஆள் சூ*** நோன்டலன்னா நல்லா இருக்காதா..

டீச் மீ கும்பூ said...

வோய் இருக்கியா...
Drunken Monkey ஆபிரிக்க அப்பாவுக்கு லெட்டர் எழுதி இருக்கு..
அதே காமெடியா இருக்கு. அதை விட காம நெடி யோட காடிதம் எழுதுயா.
நேயர் விருப்பம்.

Anonymous said...

hello jackie mama payala pathi ennum eluthama erukinga...

Anonymous said...

hello next post eppa poduvinga...i am waiting for ur post...