Sunday, 8 January 2012

பிரபல சினிமா பதிவராவது எப்படி?




என் சீடர்களுக்கு பிரபல பதிவரின் ஆசிகள்.  போன பதிவுல ‘பிரபல சமூக பதிவரா’ ஆகுறது எப்புடீன்னு பார்த்தோம். அந்தப் பதிவைப் படிச்சிட்டு, மணிப்பூர் அரசுல முக்கியப் பங்கு வகிக்கிற ஒரு பிரமுகர் எனக்கு மின்னஞ்சல் போட்ருந்தாரு. அவரோட அமைச்சரவைல இருக்குற அத்தனை பேரையும் இந்தக் கட்டுரையைப் படிக்கசொல்லி பரிந்துரைச்சிருக்காராம். அவருக்கும் என் ஆசிகள். 

இனி, பிரபல சினிமா பதிவரா எப்புடி ஆகலாம்னு பார்ப்போமா சிஸ்யர்களே?

சினிமா பதிவரா நீங்க ஆகணும்னா, பர்மா பஜார்ல யாராவது ஒரு டிவிடி விக்கிற ஆளைத் தெரிஞ்சி வெச்சிருக்குறதுதான் முதல்படி. அந்தாளும், வியாபாரமே இல்லாம கடைல ஈயடிச்சிக்கினு இருக்கணும். தற்செயலா நீங்க அவனோட கடைக்கிப் போயிருந்தா, மொதோ வேலையா, ‘னானு இண்டர்நெட்ல பெரிய ஆளு... உன் கடைக்கு விளம்பரம் புடிச்சித்தாரேன்... பதிலுக்கு எனக்கு ஃப்ரீயா இலவசமா ஓசி டிவிடி தரணும்’னு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வியாபார ஒப்பந்தம் போட்டுக்கணும். ஏன்னா, இந்த ஒப்பந்தத்தால இந்தியாவின் பாரின் செலவாணி முன்னேறும் இல்லையா? 

அதுக்கப்புறம், உங்க ப்ளாக்ல, அவன் கொடுத்த ஒலக சினிமாவைப் பத்தி எழுதணும். இதுல ஒரு முக்கிய பகுதி என்னன்னா, எப்படியும் உங்க ஒளறலைப் பார்த்து, உலக சினிமான்னு அவன் டபிள் எக்ஸ் படந்தான் கொடுத்துருப்பான். உங்க மூளைக்கி அது எப்புடியும் எட்டிருக்காது. நீங்களும் அது உலகப்படம்னு நம்பிதான் எடுத்துகிட்டு வந்திருப்பீங்க. அந்த முட்டாள் ஃபீலிங்கி, உங்க ப்லாக் படிக்கிறவங்களுக்கும் வரணூம். அந்த ரேஞ்சுல தான் நீங்க எழுதணும்.

ஓகே. எப்புடி எழுத ஆரம்பிக்கிறது?

அந்த படம் எதைப்பத்தியோ, அதுக்கு நேர் ஆப்பொசிட்டா எழுத ஆரம்பிக்கணும். இதுல இன்னொரு பாயிண்டு என்னன்னா, எப்படியும் அது ஒரு மேட்டர் படம்னுதான் கடைசி சீன்வரைக்கும் நீங்க நம்பிட்டு இருப்பீங்க. எத்தனை உயர்வான படமா அது இருந்தாலும், சீன் வரும் சீன் வரும்னே தான் நீங்க ஒக்காந்து இருப்பீங்க.. சோ, உங்களால இந்த அளவுதான் எழுத வரும். அதுனால், நேச்சுரலாவே உங்க நடை இந்த மாதிரிதான் வரணும் என்ற அளவுக்கு உங்களை நீங்க மாத்திக்கணும். 

எழுத ஆரம்பிக்கலாமா சிஸ்யர்களே?

ஒரு படத்த உதாரணமா எடுத்துக்கலாம். அதான், ‘Bridges of Madison county'. இந்தப் படத்த உதாரணமா எடுத்துக்கலாம்.

இப்புடி ஆரம்பிக்கணும். கண்டாரஓழிமுன்டை.

என்னடா இது கெட்ட வார்த்தையையும் இப்புடித்தான் ஸ்பெல்லிங் மிஸ்டீக்கோட எளுதணுமான்னு பார்க்காதீங்க.... படத்துக்கும் இந்த வார்த்தைக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா? இல்லைல்ல.. அதான் ரகசியம்.. ஒரு வரி கூட சம்மந்தம் இருக்கக்கூடாது. 

இந்த மாதிரி உங்களுக்குத் தெரிஞ்ச கெட்ட வார்த்தைகளை, தப்புத்தப்பா ச்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதணும்... அப்பதான் நீங்க தாதா, பெரிய ஆளு, தாதாயிசம் அது இதுன்ன்னு நினைச்சி எல்லாரும் பேண்டுக்குள்ள உச்சா போவாங்க..

அடுத்தது, அந்தப் படத்துல நடிச்ச நடிகை பேரு. உலக ஃபேமஸ் நடிகை அவங்க. பேரு, மெரில் ஸ்ட்ரீப் - Meryl Streep. ஆனா அவங்க்க பேரை எழுதும்போது,  MeryStreep    ன்னு எழுதணும். அட ஆம்லெட் மண்டையா பேர்ல கூட ஸ்பெல்லிங் மிஸ்டேக் போடுவியான்னு கேட்டா, ‘கசுமாலம். அவங்க பேரு அதாண்டா... ஆந்தை எனக்கு சொல்லிருக்கு..இன்னும் ரெண்டாயிரம் வருசத்துல சேரே இருக்காது. எல்லாரும் நிக்கவேண்டியதுதான்’ந்னு சம்மந்தமே இல்லாம உளறணும்.

அதுக்கப்புறம், பிலாஸ்பேக் போகணும். என் வாழ்க்கைல, நாப்பது வருசம் முன்னாடி, கிளிஞ்ச பேண்டோட நானு மூக்கு ஒலுகிட்டு நிக்கிம்போது’ன்னு ஆரம்பிச்சி, ஆவேசமா பல பேரா எழுதணும். படத்துக்கும் அதுக்கும் சம்மந்தமே இருக்கக்கூடாதுன்றதுதான் படு முக்கியம். இது ஏன்? அட அப்பத்தான்யா நீரு ஒரு பிரபல சினிமா விமர்சகரு.

இதுக்கப்புறம், விக்கிபீடியால போயி, படத்தோட அத்தனை டீட்டெயிலையும் காப்பி பண்ணி உங்க ப்லாக்ல பேஸ்ட் பண்ண மறந்துரக்கூடாது. அப்பதான் பதிவு முளுமை அடையும்.

இதுக்கப்புறம், னிங்களே க்ரியேட் பண்ணின போலி அய்டிக்களை வெச்சி, கமெண்டு போடணும். இப்புடி:

‘அண்ணே... இந்தப் பதிவைப் படிச்சப்புறம்தான் நான் மனுசனா மாறினேன். இதுவரை காண்டாமிருகமா சுத்திக்கிட்டு இருந்தேன். என்னை திருத்தினதுக்கு நன்றி.’ - இது, முதல்வகை பின்னூட்டம்.

‘அண்ணே.. இந்தப் படத்தை பத்தி படிச்சி கதறிக் கதறி அழுதேன். ஏன்னா, இதுல ஓசில பிரியாணி சாப்புட்டதைப் பத்தி நீங்க சொல்லவே இல்ல. அதுக்காகவே உங்களை வணங்குகிறேன்’

இந்த மாதிரி, அப்ப உங்க மூடு எப்புடி இருக்கோ அதுக்கேத்த பின்னூட்டம் நாலைஞ்சு போட்டுட்டு, கவுந்து படுத்து தூங்கிரணும்.

இந்த மாதிரி தெனமும் ஒரு டபிள் எக்ஸ் படத்தை பாத்துட்டு விமர்சனமும் எழுதணும். அதுக்கு விதவிதமா தலைப்பு வெக்கணூம் என்பதுதான் முக்கியம். இப்புடி:

வேலைக்காரபெண்ணின் காமம்
ஒரு நகரத்து அதிகாரியின் கிராமப்பயணம்
விபசார மாமாவின் எரிச்சல்
ரேப் செய்த சைக்கோ
லெஸ்பியன் சிறுகதை
ஹாங்காங் மைனா
ஆண் போல இருக்கும் பெண் குஜிலி

இந்த தலைப்பைப் பார்த்தாலே இது ஒரு அதிபயங்கர ட்ரிப்பிள் எக்ஸ் படம்னு எல்லாரும் நினைக்கணும். அதான் முக்கியம். 

இந்த மாதிரி தினமும் ரெண்டு விமர்சனம் எழுதி, அத்தனை திரட்டிலயும் சேர்த்துவிட்டுட்டா, மேட்டர் பதிவர்னு ரகசியமாயும், சினிமா பதிவர்ன்னு வெளிப்படையாவும் புகழ் அடையலாம். 

இதான் சினிமா பதிவரா ஆவதற்கான ரகசியம்.

அடுத்த பதிவில், சினிமா பதிவரா பிரபலம அடைய இன்னும் சில டிப்ஸ் வழங்குறேன் சிஸ்யர்களே. அதுவரை பிரபல பதிவரின் ஆசிகள்.


2 comments:

Anonymous said...

nice post

Anonymous said...

‘அன்னே... இந்தப் பதிவைப் படிச்சப்புறம்தான் நான் மனுசனா மாறினேன். இதுவரை காண்டாமிருகமா சுத்திக்கிட்டு இருந்தேன். என்னை திருத்தினதுக்கு நன்றி.’ - இது, முதல்வகை பின்னூட்டம்.

‘அன்னே.. இந்தப் படத்தை பத்தி படிச்சி கதறிக் கதறி அழுதேன். ஏன்னா, இதுல ஓசில பிரியாணி சாப்புட்டதைப் பத்தி நீங்க சொல்லவே இல்ல. அதுக்காகவே உங்களை வனங்குகிறேன்’