கடலூரில் தற்போது புயல் அடித்து இருக்கின்றது. அந்தப் புயலில்
பாதிக்கப்பாட்ட என் நன்பன் சபாஸ் எனக்குப் பொன் செய்து இருக்கின்றார்.
சும்மா தானே இருக்க? வந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யி
என்று கோபமாகப் பேசினார். கடலூர் இருக்கும் கல்கத்தா நாட்டுக்கு போக
ரயிலில் டிக்கட் ரிசர்வ் செய்யாத காரணத்தால் வர இயலவில்லை என்று என்
இரங்கலை பதிவு செய்து இருக்கின்றேன். டிக்கட் ரிசர்வ் செய்யப் போனால்,
அங்கே எப்போதும் போடும் டபிள் எக்ஸ் படம் இந்த முறை போடவில்லை என்று சொல்லி
விட்டர்கள். சரி தலைல துண்டையாவது போட்டுக்கிட்டு நைசா உள்ளே போய்
விடுகின்றேன் என்று அவர்களிடம் சொன்னேன். அதற்கு அங்கிருந்த போர்டு ஒன்றைக்
காண்பித்தார்கல். அதில் "டிக்கெட் எடுக்காத திருட்டுப்பயல்கள் வழியிலேயே
இறக்கிவிடப்படுவார்கள்" என்று போட்டிருந்தது. அதனைப் படித்துவிட்டு கதறிக்
கதறி அழுதேன்.
ஆகவே, நன்பர் சுபாசுக்கு ஒன்று சொல்லிக்கொள்கின்றேன். கடலூரில் புயல்
அடித்தால் அதனை வைத்து ஐம்பது பதிவாவது போட்டு ஒட்டு திரட்டலாம் என்று
இருக்கின்றேன். அதுதான் பிராபல பதிவரான என் பங்கலிப்பு. எனக்கு விழும்
ஒட்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு நாயா பைசா தருவதாக பிரபல உலக வங்கி தலைவர்
கொபாளகிருட்டிணன் டுவிட்டரில் போன் செய்து இருக்கின்றார். ஆகவே அதை
உங்களுக்கு அனுப்பி விடுகின்றேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள் பற்றிய அறிவிப்பு
நான் பல நாட்கலாக எழுதி வந்த ஓசி பலப்பம் தொலைந்து போய்விட்டது. கடைசியாக அதனைத் தொலைத்தா போது மப்பு ஆடித்து இருந்தேன். சைடு டிஸ்சாக வைத்து இருந்த ஸ்டார் டிவி டிடிஎச் ஆன்டனாவில் சொருகி வைத்து இருந்தேன். அதனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஓசியில் வாசகர் கடிதம் எழுதி தரப்பாடும் .

ஓமப்பொடி
போர்க் கலா நடவடிக்கை என்று நேற்று எனக்கு ஓசி பதிவு எழுதிக் கொடுத்த
ஜெட்லி சேகர் எழுதியிருந்ததைப் பார்த்து, அருமையான பன்னிக்கரி கிடைக்கும்
என்று நம்பி வீட்டை விடு வெளியே கிளம்பினேன். ஆனால் நேற்று morningகாக
இருந்ததால், இப்பொது கிடைக்காது;
காலையில் தான் அது கிடைக்கும் என்று என்னை நானே சமாதானம்
செய்து கொண்டேன். பிரபல பதிவரே உன் சமத்து.
ஆல்பம்
தானே பயல் எங்கள் ஊர் கடலூர் அருகே கரையைக் கடந்து கடலில் கள்ளத்தோணி ஏறி
துபாய் போய்விட்டான் என்று நேற்று வானொலியில் சொன்னார்கள். நம்ம ஊரில் கூட
'தானே' என்று கிழக்கிந்திய மோஸ்தரில் பசங்களுக்கு பெயர் வைத்து
இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டதும், சற்றே கண்களை மூடிக்கொண்டு,
நின்றவாரே தூங்கிவிட்டேன். காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது ..??
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னையில் மெரீனாவில் எட்டு மில்லி மீட்டருக்கு ஆலைகளை யாரோ அடித்து
நொறுக்கிவிட்டார்கள் என்று இன்டர்நெட்டில் பாடித்து இருக்கின்றேன். சுமாமி
என்று யாரோ மாமி அங்கே சில வருடங்கள் முன்னர் வந்து இருக்கின்றாராம்.
ஒருவேளை அவர் மறுபடியும் வந்தால், கடற்கரை அமைப்பை மாற்றியமமித்து ப்ரீ
சுண்டல் விற்பார் என்று என் பக்கத்து வீட்டில் இருக்கும் மாமி சொன்னார். அப்படியே அகட்டும் என்று அவரிடம் சொன்னேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிசியாக போக்குவாரத்து அதிகம் உள்ள சாலையில் எருமைமாடு நகராமல் உட்கார்ந்து
இருந்தால் எப்படி இருக்கும்?? அதே போல் தான் முந்தானேத்து வாசக நன்பர்
ரமேஸ் வீட்டில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து இருந்தேன். காரணம்.. பிரியானி
வாங்கி வந்ததாக சொன்னார். ஆனால், பிரியாணி கவர் பிரிக்கும் நேரத்தில்
அதில் இருந்து பில் ஒன்று கீழே விழுந்தது. ஆதனை எடுத்து என் இடம்
நீட்டினார். சத்தம் போடாம்ல் வெளியே தலைதெறிக்க ஓடிவந்து விட்டேன். வர வர
நாடு ரொம்பத்தான் கெட்டுப் போய்க் கிடக்கின்றது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எதிரில் ஓசி சைக்கிளில் போகின்றவார் திடீரென்று பயங்கரமாக அலறினால்
சைக்கிளின் பின்னால் ஓடியே வந்துகொண்டு இருக்கும் உங்களுக்கு எப்படி
இருக்கும்? அவர் கட்டு பாட்டை இழந்து எதிரே இருக்கும் எருமையின் மீது
ஈடித்து விட்டார். எருமை 'ம்ம்மாஆ ' என்று முக்கியது. எருமை அப்படி மூக்கிய
காரணம் சைக்கிள் பின்னால் ஓடி வந்து கொண்டு இருந்த எனக்கு மட்டும் தான் தெரியும்.
காரணம், போன வாரம், அதற்கு வைத்திருந்த பிண்ணாக்கை எடுத்து கள்ள
மார்க்கெட்டில் விற்று இருக்கின்றேன். ஆகவே அது எழுந்து என்னைத் துரத்த
ஆரம்பிக்கும்போது, தலைதெறிக்க ஓடி, வலது பக்கம் கை காமித்துக்கொண்டே இடது
பக்கம் திரும்பி விட்டேன். எருமை எமாந்து விட்டது. மழை காலத்தில் மூன்று
நாட்களுக்கு மேல் பரங்கிமாலை ஜோதி தியேட்டருக்கு ஒவ்வொரு வேளையும் நான்
சென்று கொண்டு இருந்த பொது காட்டுப்பன்னி ஒன்று என் சைக்கிள் முன்
சீட்டில் உக்கார்ந்து கோண்டு எனக்கு பெப்பே பெப்பே என்று பலிப்பு கட்டியது.
பன்னியை விற்று காசு பார்த்து விடலாம் என்று காணக்கு போட்டதால் அதனை
ஒன்றுமே செய்யவில்லை. ஒரே டபிள் எக்ஸ் படத்தை முப்பது வாட்டி பார்த்த
களைப்பில் அந்தப் பண்ணி தானாகவே மண்டையைப் போட்டு விட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிலாசபி பாண்டி
சாக்சஸ் பத்தி நிறையே பேறு பேசிட்டாங்க. இருந்தாலும் திரும்பவும்
சொல்லறேன். சாக்சஸ் உங்களுக்கு கிடைக்கலைன்னா, என்னைப் போல ஓசி சாக்ஸ் போடாம, கடைக்கு போயி புது சாக்ஸ் வாங்குங்க. அதுக்கப்புறம்
நிச்சயமா சாக்ஸ் உங்களை தேடி வரும்.
1 comment:
அருமை நண்பரே!
Post a Comment