என்னோட அத்தினி ஃபேன்களுக்கும் ஆசிர்வாதம்பா.
நானு எப்பூடி ஒரு பிரபல பதிவரா ஆனேன்? இதுதான் இந்த ப்லாக்.
சுருக்கமா சொல்லணும்னா, பிளாட்பாரத்துல டீ ஆத்திக்கினு இருந்த நானு, இப்ப தினமும் ரெண்டு பதிவு போடுற vip ஆனேன்?
கஸ்டப்பட்டு செந்தமிழ்ல நாலு பாயிண்டு போட்டுருக்கேன். அவ்வளவுதான் செந்தமிழ் நமக்கு வரும்.
1. தினமும் இரண்டு பதிவுகள் போடவேண்டும் (எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் சரி)
2. பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் எதையாவது உளற வேண்டும்
3. எந்த ப்லாகிலும் கமெண்டு மட்டும் போட்டுவிடக் கூடாது
4. அத்தனை பதிவர் சந்திப்பிலும் படு லேட்டாக நுழையவேண்டும் (கருணாநிதி பேசும்பொது வேண்டுமென்றே லேட்டாக வரும் எம்.ஜி.ஆர் போல)
5. எப்பவுமே கெத்தாவே அலையணும். யாராவது செருப்பால அடிச்சாலும் வாங்கிக்கணும். பதிலுக்கு கொலைவெறி வந்தாலும் புன்னகையாலயே பதில் சொல்லிட்டு, யாராவது ஜால்ராவை விட்டு போலி பேர்ல அவங்களைத் திட்டணும்
6. உங்களை மாதிரியே இருக்குற மொக்கை ப்லாக்கர்சை வெச்சி ஒரு வட்டமோ சதுரமோ முக்கோனமோ தொடங்கணும். அதுதான் உலகத்துலே பெரிய இயக்கம் மாதிரி பில்டப்பு கொடுக்கணும்
7. இதுதவிர இன்னும் நிறைய உள்வேலை இருக்கு. அத்தனையும் ஒண்ணொண்ணா சொல்லித்தாரேன்.
அடுத்த பதிவுல பார்ப்போம். பிரபல பதிவரின் ஆசிகள்.
No comments:
Post a Comment