Friday, 6 January 2012

பிரபல சமூக பதிவராவது எப்படி?




அனைவருக்கும் பிரபல பதிவரின் ஆசிகல்.

போன பதிவுல, பிரபல பதிவரா நான் ஆன ரகசியத்தின் சில துளிகள சொல்லிருந்தேன். மேலே தொடருவதற்கு முன்னர், தமிழ்ப் பதிவுலகதோட சில வகைகளை கவனிக்கலாம். அதுதான் நெம்ப முக்கியம்.

1. சமூக பதிவர்
2. சினிமா பதிவர்
3. அரசியல் பதிவர் (கட்சி சார்பு)
4. மொக்கை பதிவர்
5. பலபட்டறை பதிவர் (இது எல்லாத்தையும் கலந்து கட்டி எழுதுறவர்)
6. பெண் பதிவர்
7. கவிதை பதிவர்
8. கதை பதிவர்
9. ஜோசிய பதிவர்
10. மதவாதி பதிவர்

இவையே பதிவுலகின் பெரும்பான்மை வகையைச் சேர்ந்த பதிவர்கள் ஆவார்கள்.

இதுல, நம்பர் 6, 9 & 10ல கை வெச்சா, கடைசிவரைக்கும் துரத்துவாங்க என்பதால், அவங்களை விட்டுவிடலாம்.

இனிவரும் பதிவுகளில், ஒவ்வொரு வகையிலும் பிரபல பதிவர் எப்படி ஆகலாம்னு பார்ப்போமா என் சிஸ்யர்களே...

1. சமூக பதிவர்

காலைல படுக்கை விட்டு எழும்போது, சாதாரணமா நாமெல்லாம் என்ன நினைப்போம்? ‘இண்ணிக்கி நாளு எப்புடி அமையப்போவுதோ’ன்னுதானே? ஆனா, ஒரு பிரபல சமூக பதிவர் (என்னைப்போன்றவர்) என்ன நினைப்பார் தெரியுமா? 

’ஆண்டவா... இண்ணிக்கி எதாவது குறிப்பிடத்தகுந்த நிகழ்வு எதுனா நடக்கணூம்... அப்பதான் அதைப்பத்தி பதிவு போட்டு, பாப்புலர் ஆகமுடியும்’ என்று.

அப்படி நினைத்தவுடன், படுக்கைல இருந்து இறங்கி (அல்லது, தரையோட தரையா மெத்தையோ பாயோ கட்டாந்தரையாவோ இருந்தா - படுக்கைல இருந்து எந்திரிச்சி), லுங்கியை இறுக்கிக் கட்டிகிட்டு, னியூஸ் பேப்பரை வரிக்கு வரியா படிக்கணும். 

அதுல இருக்கும் வியாபார நுணுக்கம் என்னன்னா, தலைப்புச்செய்தியா கொட்டை எழுத்துல இருப்பதை விட்டுவிடவேண்டும். ஏன்னா, அதை டுவிட்டர்லயும் பேஸ்புக்குலயும், ஆர்க்குட்லயும், தெருவுல போறவனுங்க மண்டைலயும், இன்னும் எங்கெல்லாம் கேப்பு கிடைக்குதோ அங்க எல்லாத்துலயும் போடணும்னே ஒரு கும்பல் வெறிகொண்டு அலையுது. அந்த கும்பல், இந்த தலைப்புசெய்திகளை பார்த்துக்கும் (ஏன்னா அவிய்ங்களும் பிரபலம் ஆகணும் இல்லையா?).. ஆகையினால, தலைப்புச் செய்திகளை உட்டுபுட்டு, சின்னதா இருக்கும் செய்திகளை தேடணும்.

இந்த நேரத்துல, மனுசனா இருந்தா கக்கா வர ஆரம்பிக்கும். யூரியனும் தான். ஆனாலும், பிரபல பதிவர் என்பதால், இந்த இயர்கை உபாதைகளை எல்லாம் தாங்கிகிட்டு, வேகவேகமா, வரிவரிய படிக்க ஆரம்பிக்கனும். எப்படியும், எக்ஸ்பீரியன்சு உள்ள பதிவரா இருந்தா அஞ்ஜிலிருந்து பத்து நிமிசம் மிகாமயும், புது பதிவரா இருந்தா பதினைந்துல இருந்து அரை மணி மிகாமயும் செய்தி கிடைக்கும்.

செய்தி கிடைச்சதும் ஒடனே கக்கா போக கக்கூசுக்குள்ள ஓடணும். அங்க உக்காந்துக்கிட்டே, அந்த செய்தியை மினிமம் பத்து வாட்டி வாய்விட்டோ அல்லது மனசுலயோ சொல்லிப்பார்க்கணும். இந்த எடத்துல ஒரு டிச்கி என்னன்னா, வாய் விட்டு சொல்லும் செய்தியை யாராவது கேக்க நேர்ந்தால், அதிர்ச்சியை அவங்களுக்கு அது அளிக்கக்கூடாது. சில பயபுள்ளைக, ச்பெல்லிங் மிஸ்டேக்கோட படிச்சி தொலைச்சிரும். அவிய்ங்க அதை வாய்விட்டு சொல்லும்போது அதைக் கேக்குறவய்ங்க கலாசார அதிர்ச்சிக்கு ஆளாகலாம். ஆகையினால, கரீட்டா படிச்சி வெச்சிக்கணும்.

கக்கா வர்ரதுக்கு ஆவேசமா நாம முக்கும்போது, அந்த செய்தியை எப்புடி ஆரம்பிக்கணும்னு முதல் வார்த்தையோ அல்லது வரியோ புலப்படும். ‘உலகெலாம்’ அப்புடீன்னு தேவாரமோ முத்துக்கருப்பனோ அல்லது நட்ராஜோ ஆரம்பிக்குமாமே - அந்த வார்த்தையை செவனே எடுத்துக்குடுத்தாராமே - அப்புடி, கக்கா வரவர உங்க மனசு உங்களுக்கு இந்தச் செய்தியைப் பத்தின வரிகள எடுத்துக்குடுக்கும்.

அப்பால வெளில வந்து, ராசுகுட்டில பாக்கியராஜ் ரெடி ஆகுற மாதிரி, கம்ப்யூட்டரை தூசி தட்ட்டி, இண்டர்நெட் (ஓசி கனெக்சனா இருந்தா நல்லது) சரிபார்த்து, நம்ம பிரபல ப்லாக்கை ஓப்பன் பண்னனும்.

பண்ணிட்டு, பயபுள்ளைங்க முந்தின நைட்டு நம்மள கழுவி கழுவி ஊத்துன பின்னூட்டங்களை அலேக்கா ஸ்பேம் பண்ணிடனும். காரணம், ஆல்ரெடி கமெண்ட் மாடரேசன் வெச்சிருக்கோமே? ஆனா, அப்புடி மாடரேசன் ஏண்டா வெச்சன்னு யாராவது கேட்டா, ‘நான் சிங்கம்; எனக்கு பயமே இல்லை; நான் தாதா; தாராந்துப்புடுவேன்... அய்..உய்’ன்னு சோக்கா டகுலு உடணும். காரணத்தை மட்டும் சொல்லவே கூடாது. 

அப்பால, செய்தியைப் படிச்சி முக்குனோம் இல்லையா? கக்கா வராம மூஞ்சிலாம் செவந்துச்சே... அந்த கோவத்த கீபோர்டு மேல காட்டணும். சொம்மா தட்டு தட்டுன்னு ஒரு ரெண்டு மூணு பக்கத்துக்கு தட்டணும். செய்திய மொதோ பேரால சொல்லிடணும். அப்பால, அதைப்பத்தி சொல்லாம, கற்பனை களுதய தட்டி உட்டு, சின்ன வயசுல நான் கிராமத்துல நடந்து போகையில இப்புடித்தான் ஒரு ஆள் வந்தான்னு தொடங்கி, குறைன்ச பட்சம் ஒரு பக்கத்துக்கு, யேதாவது பழைய தமிழ்ப் படத்துல வர்ர ஸ்டண்ட் சீன் ஒண்ணை ஒப்பிக்கணும். அதுல என்ன கவனமா இருக்கணும்னா, அந்தப் படம் யாருக்கும் தெரிஞ்சிருக்கக்கூடாது. கே டீவீயை நைட்டு பார்த்தா, இப்புடி டண்டணக்கா படங்களை தெரிஞ்சிக்கலாம் (இப்புடித்தான் ‘ஓரம்போ’ படத்துல வர்ர ஆட்டோ சீன் - அதான் ஒரு பெரியவரு ஆர்யாவை வேலைக்கி வெப்பாரே- அதை என் சக பிரபல பதிவர் தன்னோட வாழ்க்கைல நடந்ததா எழுதி, டண்டணக்கா ஆயிட்டாரு.. அனுபவக் குறைபாடுதான்). அந்த மாதிரி காட்சிகளை எழுத எழுத, ஒரு ஆவேசம் வரும் பாருங்க.... அத அனுபவிச்சா மட்டும் தான் தெரியும்..

அப்பால, கண்டபடி எழுதிபுட்டு, அது இந்திய அரசியல்வாதியைப் பத்துனதுன்னா, அவரை ஒண்டிக்கி ஒண்டி இழுக்கணும். அதுவே தமிழ்நாட்டில இருக்குற, தமிழ் படிக்கத் தெரிஞ்ச அரசியல்வாதின்ன்னா, மருவாதியாவே ஆரம்பிச்சி, மருவாதியாவே முடிக்கணும் (காரணம், ஜெயில்ல தள்ளிபுட்டா ஆபத்தாச்சே)....

இதை சரிபார்க்கவே கூடாது என்பது முக்கியம். ச்பெல்லிங் மிஸ்டீக் சொம்மா பேராவுக்கு ஐம்பது இருக்கணும். யாராவது கேள்வி கேட்டா, ‘கசுமாலம்.. நானு இருக்குற பிசில பதிவு போடுறதே பெர்சு.. இதுல கேள்வி வேற அடிங்க’ன்னு மிரட்டுனா, சரியாயிரும்.

இதுக்குள்ள மதியம் அயிருக்கும். சாப்பாட்ட தின்னுபுட்டு, கவுந்து படுத்து தூங்கினா, நைட்டு எந்திரிச்சி மருபடியும் சாப்புட்டு தூங்கலாம்.

காலைல கக்கா வரும். கூடவே, சிந்தனையும் வரும். அப்பால, அனானி கெமெண்ட் அழிக்கிறது, புது செய்தி பதிவு போடுறதுன்னு ஓட்டலாம். 

இப்புடி ரெண்டு மாசமாவது மினிமம் செய்யணும். கூடவே, இட்லி, வடைன்னு இருக்குற அத்தனை திரட்டிலயும் இணையணும். அப்பதான் ஓட்டு போடலாம். ஓட்டுபோடுங்கள்... அதுதான் ஜனனாயக கடமைன்னு எல்லாம் பின்னூட்டப் பெட்டி முன்னால எழுதணூம்.

நாளைக்கி, எப்புடி சினிமா பிரபலம் ஆகணும்னு தெரிஞ்சிக்கலாம். அதுவரை, பிரபல பதிவரின் ஆசிகள்.

5 comments:

கோவை நேரம் said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...

Unknown said...

எனக்கு இது வரை வந்துச்சு அப்பரம் பாவனுவமொன்னு விட்டுட்டேன். be care ful . என்ன சொன்னேன்.



அடுத்து சினிமா பதிவர் ஆவது எப்படி என்பதை எதிர் பார்த்து

பிரபல பதிவர் said...

@ கோவை நேரம் சார் - பிரபல பதிவர்ன்னா இப்புடித்தான் யோசிக்கணும். நன்றி

@ மழைதூறல் சார் - சினிமா பதிவர் பதிவு வந்துவிட்டது. நன்றி

ப.கந்தசாமி said...

//இதுக்குள்ள மதியம் அயிருக்கும். சாப்பாட்ட தின்னுபுட்டு, கவுந்து படுத்து தூங்கினா, நைட்டு எந்திரிச்சி மருபடியும் சாப்புட்டு தூங்கலாம்.//

அதெப்படிங்க நான் செய்யறத கரெக்ட்டா சொல்றீங்க?

Robin said...

எழுத்துப் பிழைகளை கவனியுங்கள்